பேச்சை குறைத்து, செயலில் காட்டுவோம் - கே.என்.நேரு அட்வைஸ்

கே.என்.நேரு

திருச்சி மாவட்டத்தில்   100 சதவீதம் வெற்றியைப் பெற்றதால், மாவட்டச் செயலாளராக இருந்து  நான்  முதன்மைச் செயலாளராகினேன்.

  • Share this:
திருச்சி மேற்கு தொகுதி திமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ், மதிமுக, கம்யூ. கள், விசிக, முஸ்லீம் லீக், பாார்வர்டு பிளாக்  உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில்,வேட்பாளரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், அனைத்து கட்சியினரின் அன்போடுதான் நான் திமுக முதன்மைச் செயலாளர் ஆகியுள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பால் திருச்சி மாவட்டத்தில்   100 சதவீதம் வெற்றியைப் பெற்றதால், மாவட்டச் செயலாளராக இருந்து  நான்  முதன்மைச் செயலாளராகினேன்.

திமுக ஆட்சி அமைந்ததும் சென்னைக்கு அடுத்து திருச்சி என்று சொல்லும் வகையில் செயல்படுவேன். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். அனைத்து மக்களுக்கும் குடிநீர், கழிவறை வசதிகள் உறுதி செய்யப்படும் என்றார்.
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை முதலில் திருச்சிக்கு கொண்டு வருவேன். கூட்டணிக் கட்சிகளின் முன்னேற்றத்திற்கு அரசு சட்டதிட்டத்திற்கு உட்பட்டு, உதவி செய்வேன் என்றார்.

இதேபோல்,திருச்சி கிழக்கு தொகுதி செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் தலைமையில் நேற்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய கே.என்.நேரு, திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக உள்ள இனிகோ இருதயராஜ் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் போட்டியிடும் அளவிற்கு தலைமைக்கு நெருக்கமானவர். ஆனால், இங்கு வர நான்தான் காரணம் என்று என்னை சிலர் திட்டுகிறார்கள். நான் காரணமல்ல. வேட்பாளர் இனிகோ முனைவர் பட்டம் பெற்றவர். நாங்க படிக்காதவர்கள்.

எனவே அய்யா , சாமி ஓட்டு போடுங்க என்று மட்டும் ஓட்டு கேட்டால் போதும். எதையாவது பேசினால், அதை செல்போனில் பிடிச்சு,  சமூக வலைதளங்களில் போட்டுவிட்டு, பிரச்சினையாகிடும். எனவே பேச்சைக் குறைத்துக் கொண்டு, செயலில் இறங்க வேண்டும் என்றார்.
Published by:Vijay R
First published: