தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

ஜி.கே.வாசன்

தமிழ் காங்கிரஸ் கட்சி 12 இடங்களை கேட்டுவந்த நிலையில் 6 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக தலைமை.

 • Share this:
  அதிமுக கூட்டணயில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 6 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 6 இடங்களை ஒதுக்குவதாக நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ் காங்கிரஸ் கட்சி 12 இடங்களை கேட்டுவந்த நிலையில் 6 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக தலைமை. அதுமட்டுமின்றி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தமாகா வெளியிட்டுள்ளது.

   

  தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள்

  ஈரோடு கிழக்கு - யுவராஜா
  தூத்துக்குடி - விஜயசீலன்
  கிள்ளியூர் - ஜூட் டேவிட்
  பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்
  திரு.வி.க நகர் - கல்யாணி
  லால்குடி - தர்மராஜ்  இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு மற்றும் கிள்ளியூர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக மோதுகிறது.
  Published by:Vijay R
  First published: