சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிப்பு

சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிப்பு

கமல்ஹாசன்-சரத்குமார்.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் , நாங்குநேரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பான்மையான தொகுதிகளை சமக கட்சி பெற்றுள்ளது

 • Share this:
  மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் அங்கம்ம் வகிக்கும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 40 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்தன. கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் என்றும் சரத்குமார் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மக்கள் நீதி மய்யம் தொடங்கியது.

  இதை தொடர்ந்து கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில் சமக போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிக்ப்பட்டுள்ளது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் , நாங்குநேரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பான்மையான தொகுதிகளை சமக கட்சி பெற்றுள்ளது. சென்னையை பொறுத்தவரை துறைமுகம் தொகுதியை மட்டும் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

  சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள்  Published by:Vijay R
  First published: