உயிர்பிரியும் வரை காவிரி உரிமைக்காக போராடியவர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின் பதிலடி

மு.க.ஸ்டாலின்

காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1975 முதல் போராடி இடைக்கால தீர்ப்பை பெற்றுதந்தவர் கருணாநிதி என்று விளக்கம்.

 • Share this:
  உயிர்பிரியும் வரை காவிரி உரிமைக்காக போராடியவர் கருணாநிதி என்று, முதல்வர் பழனிசாமி கருத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

  ஒரத்தநாட்டில் 8 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் ராஜராஜ சோழன் சமாதி உள்ள உடையாளூரில் நினைவகம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

  திமுக மிட்டாய் கொடுப்பதாக சாடும் முதல்வர், தற்போது அல்வா கொடுப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1975 முதல் போராடி இடைக்கால தீர்ப்பை பெற்றுதந்தவர் கருணாநிதி என்று விளக்கம் அளித்த ஸ்டாலின், காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து அதன் உரிமையை காப்பாற்றியது திமுக என்றும் கூறியுள்ளார்.

  இதற்கு முன்னதாக கடலூர் மாவட்டம், புவனகிரியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை வர காரணம் கருணாநிதி என்று சாடிய முதலமைச்சர், கபிணி அணை கட்டப்படுவதை அவர் தடுக்கவில்லை என்றும் விமர்சித்தார்.  மு.க.ஸ்டாலினுக்கு தனி அடையாளம் கிடையாது என்றும், கருணாநிதியின் மகன் என்ற அடையாளத்திலேயே செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார்.

   
  Published by:Vijay R
  First published: