சென்னையில் ரஜினி - கமல் திடீர் சந்திப்பு... சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கேட்டு ஆலோசனை?

ரஜினி - கமல்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும், ஆரம்பிக்கவில்லை என்றாலும் அவரிடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

 • Share this:
  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது.

  தனி கட்சி ஆரம்பித்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என நடிகர் ரஜினிகாந்த்த கூறியிருந்தார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை நலிவடைந்ததால் கட்சி ஆரம்பிக்கும் பணியை கைவிட்டார். தனது அரசியல் முடிவு குறித்து பொது மக்கள் மற்றும் ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும், ஆரம்பிக்கவில்லை என்றாலும் அவரிடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

  இதனிடையே இன்று ரஜினிகாந்தின் போயஸ்கார்டன் இல்லத்திற்கு வருகை தந்த கமல்ஹாசன் அவருடன் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். வரும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கமல், ரஜினியிடம் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு கட்சிக்கும் இதுவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதல் அவரது ஆதரவை பெறுவதற்கு பல கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: