திமுக - மதிமுக தொகுதி பங்கீடு பேசு்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை - மல்லை சத்யா

மு.க.ஸ்டாலின் - வைகோ

  • Share this:
    திமுக - மதிமுக கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

    சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - மதிமுக 2-ம் கட்ட இன்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்று மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

    திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மல்லையா சத்யா, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த முறை இருந்த நிலையே தற்போதும் நீடிக்கிறது. கடந்த முறை என்ன சொன்னார்களோ அதையே தற்போதும் பேசுகிறார்கள். தற்போது நடந்த பேச்சுவார்த்தை குறித்து பொதுச்செயலாளர் வைகோ உடன் ஆலோசனை நடத்துவோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என்றார்.

    மதிமுக தரப்பிலிருந்து 8 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் திமுக 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுக - மதிமுக கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published: