தொகுதியா? லட்சியமா? என்று கேட்டால் லட்சியத்திற்கு தான் முதல் இடம் - முத்தரசன்

தொகுதியா? லட்சியமா? என்று கேட்டால் லட்சியத்திற்கு தான் முதல் இடம் - முத்தரசன்

முத்தரசன்

வகுப்புவாத சக்திகள் இந்த தேர்தலில் சில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கின்றது.

  • Share this:
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற உள்ள நிலையில் தொகுதி பங்கீட்டில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

அதை தொடர்ந்து விசிக உடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு நிறைவடைந்து அந்த கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறியாகவே உள்ளது.

இந்நிலையில் இந்திய கம்னியூஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்திற்கு மிக மிக முக்கியமான தேர்தல் இது. இந்த தேர்தலில் தொகுதியின் எண்ணிக்கையா, லட்சியமா என்று கேட்டால். லட்சியத்திற்கு தான் முதல் இடம். தமிழகம் வகுப்புவாதத்திற்கு எதிராக களம் கண்ட மாநிலம். வகுப்புவாத சக்திகள் இந்த தேர்தலில் சில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கின்றது.ஒரு பக்கம் பாஜக, அதிமுக மற்றொரு பக்கம் அவர்களால் உருவாக்கப்பட்ட மற்றொரு அணி. இவர்களை தோற்க அடிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக கூட்டணி உள்ளது, இதை நன்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. இந்த நோக்கம் வெற்றி அடைய வேண்டும் என்றும் கூட்டணி வெற்றி அடைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் திமுக உடன் தொகுதி பங்கீட்டில் கையெழுத்து இட்டுள்ளோம் என தெரிவித்தார்.
Published by:Ram Sankar
First published: