சிபிஎம்-க்கு 7, சிபிஐ-க்கு 6.. திமுக கூட்டணியில் கம்னியூஸ்ட் கட்சிகள் கேட்கும் தொகுதிகள்?

சிபிஎம்-க்கு 7, சிபிஐ-க்கு 6.. திமுக கூட்டணியில் கம்னியூஸ்ட் கட்சிகள் கேட்கும் தொகுதிகள்?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

மார்க்சிஸ்ட் தரப்பில் 10 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், 7 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக சம்மதம் தெரிவித்ததாகவும், கூறப்படுகிறது.

 • Share this:
  திமுக - இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே, முதல்கட்டமாக நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலாவதாக, திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக சார்பில் டி ஆர் பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையிலான குழுவினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இந்த பேச்சுவார்த்தையின்போது மார்க்சிஸ்ட் தரப்பில் 10 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், 7 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக சம்மதம் தெரிவித்ததாகவும், கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், அக்கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், தேசிய குழு உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகள் கேட்டதாகவும், 5 முதல் 6 தொகுதிகள் தர திமுக சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது இரு கட்சிகளுடனும் நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அதன் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது
  Published by:Vijay R
  First published: