தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு

தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு

அண்ணா அறிவாலயம்

நாளை மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

 • Share this:
  சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக கட்சிகள் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்த உள்ளன.

  அதிமுக கூட்டணி கட்சியான பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

  இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

  மேலும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடனும் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.
  Published by:Vijay R
  First published: