சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி?

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி?

விஜயகாந்த்

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதை அடுத்து அமமுக அல்லது மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியோடு கைகோப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  • Share this:
    சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுடன் அதிமுக, திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் நிலைியல் தேமுதிக-வின் நிலைப்பாடு குறித்த கேள்விகள் இருந்து வருகிறது. அதிமுக உடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியது.

    அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதை அடுத்து அமமுக அல்லது மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியோடு கைகோப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமமுக, மநீம உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து போட்டியிடும் தொகுதிகள் உட்பட அனைத்தையும் இறுதி செய்துவிட்டது.

    இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கட்சி உடனும் கூட்டணி அமைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யபப்பட்டு அவர்களையும் விரைவில் அறிவித்தால் தான் அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளை தேமுதிக தொண்டர்களால் மேற்கொள்ளப்படும்.
    Published by:Vijay R
    First published: