Exclusive : குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து களப்பணி செய்வது உண்மைதான் - வானதி ஸ்ரீனிவாசன்

Exclusive : குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து களப்பணி செய்வது உண்மைதான் - வானதி ஸ்ரீனிவாசன்

வானதி சீனிவாசன்

கூட்டணயில் இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு தேவையான தொகுதிகள் மற்றும் விருப்பமான தொகுதிகளை கேட்டுப்பெறும்.

  • Share this:
    சசிகலா  அரசியல் விலகல், அதிமுக உடனான தொகுதி பங்கீடு குறித்த கேள்விகளுக்கு பாஜக மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பதிலளித்தார்.

    இந்த சிறப்பு நேர்காணலின் போது பேசிய வானதி ஸ்ரீனிவாசன்,  சசிகலா அரசியல் விலகல் அவர் சுயமாக எடுத்த முடிவு தான். அதில் பாஜக எந்த இடத்திலும் வரவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பின் இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்று தான் அனைவரும் நினைதார்கள். தமிழகத்தில் ஒரு நிலையான அரசு அமைவதற்கும் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் மட்டுமே பாஜக உறுதுணையாக இருந்தது. அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் என்றும் பாஜக நுழைந்தது இல்லை.

    நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி இருந்தது பாஜக. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக-விற்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தது. தேசிய ஜனநாயக கூட்டணயில் முதல்வர் வேட்டபாளர் யார் என்று எங்கள் தலைமை தான் சொல்ல வேண்டும் என்றிருந்தோம். அதற்காக முதல்வர் பழனிசாமியை எதிர்கவோ, ஏற்றுக்கொள்ளாமாலோ இல்லை.



    கூட்டணயில் இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு தேவையான தொகுதிகள் மற்றும் விருப்பமான தொகுதிகளை கேட்டுப்பெறும். இதில் எந்த ஒளிவும் மறைவுமில்லை. இதனால் அந்த கூட்டணி கட்சிக்கு அழுத்தம் கொடுக்கிறோம், மிரட்டல் கொடுக்கிறாம் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
    Published by:Vijay R
    First published: