தமிழகத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழகத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். பூரண மது விலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

  • Share this:
    தமிழகத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலினத்தவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சென்னையில் வெளியிட்டார். தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது.

    அதில், 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சென்னை 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்கப்படும். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலினத்தவர்களிடம் கொடுக்கப்படும். 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும்.

    விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைக்கபடும். வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். பூரண மது விலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போன்று மீனவர்களுக்கும் 6000 ரூபாய் ஊக்கத்தொகை தரப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
    Published by:Vijay R
    First published: