உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி ஒரு பார்வை

உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி ஒரு பார்வை

நீலகிரி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியில் ஆண் வேட்பாளர்களைவிட பெண் வேட்பாளர்களே அதிகம்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதியில் ஆண் வேட்பாளர்களைவிட பெண் வேட்பாளர்களே அதிகம்.

 • Share this:
  மலைகளின் அரசி என அழைப்படும் நீலகிரி மாவட்டம்  55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். உதகை, குன்னூர், கோத்தகிரி என 3 தொகுதிகளை கொண்ட மாவட்டம் நீலகிரி. இந்த 3 தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 7.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

  நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை

  ஆண் வாக்காளர்கள்   :                            2,75,545 பேர்

  பெண் வாக்காளர்கள்  :                            2,96,196 பேர்

  மூன்றாம் பாலின வாக்காளர்கள் :                12 பேர்

  மொத்தம்                                                                 5,71,753 வாக்காளர்கள் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பெண் வாக்களர்கள் தான் அதிகம்.

  உதகை


  தொழில்: மாவட்டத்தின் முக்கியத் தொழிலாக தேயிலை, மலைகாய்கறி விவசாயம் பார்க்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டப் பணிகளுக்கு செல்கின்றனர்.

  அணைகள்: மாவட்டத்தில் 13 அணைகள் உள்ளன.

  மாவட்டம்   : நீலகிரி

  சட்டமன்ற தொகுதியின் பெயர் : உதகை

  உதகை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை

  ஆண் வாக்காளர்கள்  :                         98,353

   பெண் வாக்காளர்கள் :                      1,06,775

   மூன்றாம் பாலின வாக்காளர்கள்:      10

   மொத்தம்                                                         :  2,05,138 வாக்களர்கள் உள்ளனர்.

  தேயிலைத்தோட்டம் உதகை


  சுற்றுலா தளங்கள் :

  உலக பிரசத்தி பெற்ற தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, தேயிலை பூங்காவை பார்வையிட அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிகின்றன.  உதகை சுற்றுலா பிரதேசமாக பார்க்கப்படுகிறது.

  உதகை


  1957-ம் ஆண்டு முதல் 2016 சட்டமன்றத் தேர்தல் வரை உதகை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களே அதிக முறை வெற்றிப்பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் 9 முறை வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகளாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க  தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

  தேர்தல் நடந்த ஆண்டுகள் :

  உதகை தொகுதி   

  1957 – லிங்கா கவுடர்   ( காங்கிரஸ்)

  1962  – கர்சண்    (காங்கிரஸ்)

  1967 – போஜன்  (சுதந்திர கட்சி)

  1971 -  தேவராஜன்   (தி.மு.க)

  1977 – கோபாலன்  (அ.தி.மு.க)

  1980 – கல்லன்  (காங்கிரஸ்)

  1984 –  கல்லன் (காங்கிரஸ்)

  1989  - எச்.எம் ராஜா   (காங்கிரஸ்)

  1991 -   எச்.எம்.ராஜா  (காங்கிரஸ்)

  1996 – குண்டன்   (தி.மு.க)

  2001 - எச்.எம் ராஜ   (காங்கிரஸ்)

  2006 - கோபாலன்  (காங்கிரஸ்)

  2011 – புத்திசந்திரன்  (அ.தி.மு.க)

  2016 – கணேஷ்  (காங்கிரஸ்)

  கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் உதகை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கணேஷ் 67,747 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக அ.தி.மு.க-வை சேர்ந்த வினோத் 57,329 வாக்குகள் பெற்றார்.

  உதகை


  உதகையின் முக்கிய பிரச்சனைகள்:

  வாகன நிறுத்துமிடம்.

  சுற்றுலா பிரதேசமான உதகையில் கோடை காலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். ஆண்டுதோறும் உதகைக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான வாகன நிறுத்துமிடம் இல்லை. சாலைகளிலே வாகனங்களை நிறுத்தி செல்லும் நிலைதான் உள்ளது. உதகையில் வாகனநிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

  தேயிலைக்கு விலை நிர்ணயம், மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம், மலை காய்கறிகளுக்கு விற்பனை மையம் உள்ளிட்ட கோரிக்கைகளை உதகை மக்கள் முன்வைக்கின்றனர்.

  செய்தியாளர் - ஜார்ஜ் வில்லியம்ஸ்
  Published by:Ramprasath H
  First published: