திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி ஒரு பார்வை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி ஒரு பார்வை

போளூர் ரயில் நிலையம்

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போளூர் தொகுதியில் தி.மு.க 8,000-த்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளது.

 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தொகுதி போளூர். பொருளூர் என்ற சொல் காலப்போக்கில் போளூர் என மாறியது. பொருள் என்பது செல்வத்திடம் என்று பொருள் இது தற்போது போளூர் என்று அழைக்கப்படுகிறது. போளூர் மலைகள் சூழ்ந்த பகுதி ஆகும். ஜவ்வாது மலை அடிவாரத்தில் போளூர் அமைந்துள்ளது. இங்கு விட்டோபா சுவாமிகள் ஜீவசமாதி அமைவிடம் அமைந்துள்ளது.

  தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை

  ஆண் வாக்காளர்கள்                                 -    1,17,842 பேர்

  பெண் வாக்காளர்கள்                                -  1,21,563 பேர்

  மூன்றாம் பாலின வாக்காளர்கள்     -            5 பேர்

  மொத்தம்                                                                  2,39,410  வாக்காளர்கள் உள்ளனர்.

  போளூர்


   தொழில்

  போளூர் தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக அமைந்துள்ளது. நெசவாளர்களும் இப்பகுதியில் உள்ளனர். இப்பகுதியில் கரும்பு அதிகப்படியாக பயிரிடப்படுகிறது. பிரதான தொழிலான விவசாயத்தில் சுமார் 60 சதவிகித மக்கள் ஈடுபட்டுள்ளனர். 10 சதவீத மக்கள் நெசவுத் தொழிலை நம்பி உள்ளனர். 20 சதவீத மக்கள் கட்டுமானத் தொழிலை நம்பி உள்ளனர். 10 சதவீத மக்கள் இதர தொழில் புரிந்து வருகின்றனர்.

  தேர்தல் வரலாறு

  1990ல் இருந்து 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் வரை எந்தெந்த  கட்சிகள் எத்தனை முறை வென்றுள்ளன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

  1991 - டி. வேடியப்பன்                 (அதிமுக)

  1996 -ராஜேந்திரன்                         (திமுக)

  2001 -நளினி மனோகரன்          (அதிமுக)

  2006  - பி .எஸ். விஜயகுமார்      (காங்கிரஸ்)

  2011  - எல் .ஜெயசுதா                      (அதிமுக)

  2016 -  கே .வி .சேகரன்                   ( திமுக )

  கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை சேர்ந்த கே.வி.சேகரன் 8,273 வாக்குக்ள வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். இந்த தொகுதியை பொறுத்தவரையில் திராவிட கட்சிகள் மாறி மாறி வெற்றிப் பெற்று வருகின்றனர். காங்கிரஸ் கட்சி இங்கு ஒருமுறை வென்றுள்ளது.

  போளூர் ரயில் நிலையம்


  மக்களின் எதிர்பார்ப்பு

  போளூர் நெசவுத்தொழில் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு 500க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் நெசவுத் தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக கூலி உயர்வு இன்றி அடிமட்ட கூலிக்கு பட்டு மற்றும் கைத்தறி நெசவு செய்து வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் கூலி உயர்வு இல்லாத காரணத்தால் நெசவுத் தொழிலாளர்கள் நெசவுத் தொழிலை கைவிட்டு விட்டு மற்ற தொழிலுக்கு மாறி வருவதாக இங்கு உள்ள நெசவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் இதனால் நெசவுத்தொழில் வீழ்ச்சியடையும் சூழல் உள்ளது.

  சுமார் 10 மாதங்களுக்கு மேலாக தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு தொழில் மிகவும் நலிவடைந்து விட்டது என்று நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் நெசவாளர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள முத்ரா கடன், நேரடி  நகை கடன், P M E G P மற்றும் UYEGP ஆகிய கடன்களை அரசு முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது நெசவாளர்களின்  கோரிக்கையாக இருக்கிறது. 100 யூனிட் மின்சாரம் மட்டும் பயனில் உள்ளது. நெசவாளர்களுக்கு விவசாய மின்சாரம் போல் முற்றிலும் இலவசம் என்கின்ற நிலை வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். போளூரில் நெசவாளர் கூட்டுறவு வங்கி தொடங்க வேண்டும் என்பது நெசவாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

  தரணி சர்க்கரை ஆலை கடந்த இரண்டு வருடங்களாக முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆலையை நம்பியுள்ள சுமார் 250 தொழிலாளர்களும் மற்றும் அவர்கள் குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.

  சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 150 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ளது. இதை உடனே ஆலை நிர்வாகம் தரவேண்டுமென விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் ஆர்ப்பாட்டம் செய்து எந்த பலனும் அளிக்கவில்லை என வேதனை அடைகின்றனர்‌. பூட்டிக்கிடக்கும் ஆலை நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தொழிலாளர்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  போளூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும். ஆந்திரா கர்நாடகாவில் இருந்தும் வெளி மாநில பேருந்துகள் அதிகப்படியாக வந்து செல்கின்றனர் கடலூர் முதல் சித்தூர் வரை பிரதான சாலை அமைந்துள்ளதால் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மிக அருகாமையில் உள்ளதாலும் நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால் பேருந்து வந்து நின்று செல்வதற்கு போதிய இட வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர் மிகவும் பழமை வாய்ந்த பேருந்து நிலையத்தை விரிவாக்கமோ அல்லது இடமாற்றமும் செய்து‌ தர வேண்டும் என்று மக்களின் நெடு நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

  செய்தியாளர் - மோகன், போளூர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: