TNAssemblyElection2021 | அ.தி.மு.க கோட்டையான கோபிசெட்டிபாளையம் தொகுதி ஒரு பார்வை...

கொடிவேரிஅணை, குண்டேரிப்பள்ளம் அணை,பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில், பச்சமலை பவளமலை ஆகியவை முக்கிய இடங்களாகவும் சுற்றுலா தலங்களாகவும் கருதப்படுகிறது.

கொடிவேரிஅணை, குண்டேரிப்பள்ளம் அணை,பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில், பச்சமலை பவளமலை ஆகியவை முக்கிய இடங்களாகவும் சுற்றுலா தலங்களாகவும் கருதப்படுகிறது.

  • Share this:
    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்களில் நெல்,வாழை, கரும்பு, மஞ்சள், மரவள்ளி தென்னை மற்றும் இதர பயிர்களும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன கால்வாய்கள் மூலமும் பவானிசாகர் அணையிலிருந்து வரும் கீழ்பவானி பிரதான கால்வாய் மூலமும் பாசன வசதி பெறுகின்றன. கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 80 சதவிகித பொதுமக்கள்  விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்துவருகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெறுகிறது.

    கோபிசெட்டிபாளையம்


    கோபிசெட்டிபாளையத்திற்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர் தேவைக்கும் பயன்படுவது பவானி ஆறு ஆகும். கொடிவேரிஅணை, குண்டேரிப்பள்ளம் அணை,பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில், பச்சமலை பவளமலை ஆகியவை முக்கிய இடங்களாகவும் சுற்றுலா தலங்களாகவும் கருதப்படுகிறது.

    சின்னக்கோடம்பாக்கம் என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையத்தில் வெளிப்புறப் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெறும். அரசு கலைக்கல்லூரி, அரசு ஐடிஐ தொழிற்நிறுவனம், சுயநிதி கலைக்கல்லூரி, மற்றும் தனியார் பெண்கள் கலைக்கல்லூரிகள் இங்கு உள்ளது.

    தொகுதியின் வரலாறு

    கோபிசெட்டிபாயையம் வாக்காளர்கள் எண்ணிக்கை

    ஆண் வாக்காளர்கள்                              : 120701

    பெண் வாக்காளர்கள்                             : 129356

    மூன்றாம் பாலின வாக்காளர்கள் :            8

    மொத்த வாக்காளர்கள்                        :    250065

     

     

    கோபிசெட்டிப்பாளையத்தில் கட்சிகளின் வெற்றி

    1952     நல்லாகவுண்டர்     ( காங்கிரஸ்)

    1957  பி. ஜி.கருத்திருமன்    (காங்கிரஸ் )

    1962  முத்துவேலப்ப கவுண்டர்  (காங்கிரஸ்)

    1967  கே. எம். ஆர். கவுண்டர் (சுதந்திரா கட்சி)

    1971  ச. மு. பழனியப்பன் (திமுக)

    1977  கே. என். கே. இராமசாமி (அதிமுக)

    1980  கே. ஏ. செங்கோட்டையன் (அதிமுக)

    1984  கே. ஏ. செங்கோட்டையன் (அதிமுக)

    1989  கே. ஏ. செங்கோட்டையன் (அதிமுக)

    1991  கே. ஏ. செங்கோட்டையன் (அதிமுக )

    1996  ஜி. பி. வெங்கிடு     (திமுக)

    2001  ச. ச. இரமணீதரன் (அதிமுக)

    2006  கே. ஏ. செங்கோட்டையன் (அதிமுக)

    2011  கே. ஏ. செங்கோட்டையன் (அதிமுக)

    கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதுவரை அஇஅதிமுக - 10 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 2 முறையும், சுதந்திரா கட்சி 1 முறையும் வெற்றிபெற்றுள்ளது.



    கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் கோபிசெட்டிபாளையம் தூக்கநாய்க்கன்பாளையம் நம்பியூர் ஆகிய மூன்று ஒன்றியங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியாகவும் கொளப்பலூர் காசிபாளையம் நம்பியூர் வாணிப்புத்தூர் பெரியகொடிவேரி எலத்தூர் ஆகிய பேரூராட்சிகள் உள்ளது.

    வயலும் வயல்சார்ந்த மலைப்பகுதியும் உள்ள இடமாக கோபிசெட்டிபாளையம் திகழ்கிறது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். விவசாய கூலிவேலைக்கு சென்றவர் தற்போது அருகில் உள்ள திருப்பூர் மாட்டத்தில் இருக்கும் பனியன் கம்பெனிகளுக்கும் நூற்பாலைகளுக்கும் வேலைக்கு செல்வதால் விவசாய கூலிவேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    தொகுதி எம்.எல்.ஏ-வின் செயல்பாடுகள்

    கோபிசெட்டிபாயைம் எம்.எல்.ஏவாக இருக்கும் கே.செங்கோட்டையன் முதலில் சத்தியமங்கலம் தொகுதியில் 1977 ஆண்டு போட்டியிட்டு முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்றார். அதன் தொடர்ச்சியாக 1980 முதல் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருகிறார். இதில் 1991 முதல் 1996 வரை தமிழக போக்குவரத்துத்துறை மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்துள்ளார். அ.தி.மு.கவின் தலைமை நிலையச் செயலாளராகவும் பணியாற்றினார்.

    அமைச்சர் செங்கோட்டையன்
    அமைச்சர் செங்கோட்டையன்


    கே.செங்கோட்டையன் கோபி தொகுதியில் 8 முறை போட்டியுள்ளார். இதில் 7 முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இவர் வேளாண்மைத்துறை அமைச்சர் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மற்றும் வருவாய்துறை அமைச்சராக இருந்து தற்போது பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.பொதுமக்களுக்கு என்றும் ஆதரவாகவும்,கோரிக்கைகளை உடனே நிவர்த்தி செய்து அதற்காக பணிகளை செய்து முடிப்பவர் கோபி தொகுதி எம்.எல்.ஏ.செங்கோட்டையன். கோபிசெட்டிப்பாளையம் அ.தி.மு.கவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது.

    ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

    • ரு.52.80 கோடியில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிக்கு புதிய குடிநீர் திட்டப்பணி…

    • ரு.2.63 கோடியில் குப்பைக்கிடங்கை சீரமைத்து குப்பைகளை பிரித்தெடுத்து நிலத்தை மீட்க்கும் பணி…

    • ரூ.19 கோடியில் கோபிசெட்டிபாளையம் புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு…

    • நம்பியூரில் கலை அறிவியல் கல்லூரி அமைத்தல் மற்றும் ரூ.9.60 கோடியில் கட்டுமானப்பணி…

    • தாசப்பகவுண்டன்புதூரில் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்தல் மற்றும் ரூ.5.40 கோடியில் கட்டுமானப்பணி…

    • குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி குளங்கள் தூர்வாருதல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது…

    • ரூ.13.60 கோடி மதிப்பீட்டில் புதிய நெல் கொள்முதல் நிலையத்துடன் கூடிய வணிகவளாகம்…

    • நம்பியூரில் புதிய தீயணைப்பு நிலையம்…

    • கோபி நகர் முழுவதும் கம்பியில்லா மின் இணைப்புகள்…

    • தினசரி காய்கறி சந்தைக்கு புதிய கட்டிடம்…

    • 24 மணி நேர கால்நடை தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை…

    • ரூ.21 கோடியில் கோபி நகர் தூசி படியா சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு…

    • ரூ.11.50 கோடியில் கீரிப்பள்ளம் ஓடையில் மழை வெள்ளத்தடுப்பு சுவர் மற்றும் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு….

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் சாலைகள் மேம் பாட்டிற்கு ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு…

    • ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் மொடச்சூர் இந்திராநகர் குளம் புரமைக்கப்பட்டு சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரி செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

    • ரூ.1.532 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு நீரேற்று நிலையம்.

    • ரூ.146.70 கோடி மதிப்பில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன கால்வாய்கள் புரனமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது..

    • அளுக்குளி,நம்பியூர்,நாதிபாளையம்,அக்கரை கொடிவேரி,அரக்கன்கோட்டை,மோதூர் பகுதிகளில் ரூ.247 கோடி மதிப்பில் 2866 அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் கட்டப்பட்டு வருகிறது.


    வாக்குறுதிகள் என்னென்ன?

    கோபி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த குப்பை கிடங்கினால் கரட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபாடு, குப்பைகளுக்கு தீ வைப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மூச்சு தினறல் ஏற்படுகிறது.காற்று மாசுபாடு ஏற்பட்ட வருகிறது,

    தற்போது இந்த குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெக்கும் பணிக்காக 2.63 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது,

    கீரிப்பள்ளம் கழிவுநீர் ஓடையிலிருந்து தடப்பள்ளி வாய்காலில் கலக்கும் இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார்.

    கீரிபள்ளம் ஓடையின் இருபுறம் கான்கீரிட் அமைத்தல் நடைபாதை மற்றும் பூங்கா அமைப்பதற்காக  ஜனவரி மாதம் 11.கோடி மதிப்பிலான பூமி பூஜையை துவக்கி வைத்துள்ளார்.



    தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்

    ஒவ்வொரு ஒன்றியங்களுக்கும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக குளர்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும். மஞ்சள் வாழை,கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும்,

    கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பகுதிகளில் பெரும்பாலும் பனை ஏறும் தொழிழ் செய்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் கருப்பட்டடி, வெல்லம் போன்றவற்றை சேமித்து விற்பனை செய்ய சேமிப்பு கிடங்கு அமைத்து தர பல முறை மனு அளித்தும் தற்போது வரை சேமிப்பு கிடங்கு அமைத்து தரவில்லை.

    கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சமத்துவபுரத்தில் சுடுகாடு இல்லை என பலமுறை சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கொடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..

    அதிகம் விவசாயம் செய்யும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் விளையும் நெல்களை கொள்முதல் செய்யும் கொள்முதல் நிலையங்களில் இட வாடகை,கூலியாட்டகள் பற்றாக்குறை,மற்றும் இதர செலவுகளுக்கு விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்கபடுவதை தடுக்க வேண்டும்,மேலும் நீண்ட நாள் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் முக்கிய தேர்வாக உள்ளது,அந்த தண்ணீரை நிலங்களுக்கு கொண்டு வர முன்முனை மின்சாரம் தேவைபடுகிறது,இந்த மும்முனை மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    செய்தியாளர்: தினேஷ்
    Published by:Ramprasath H
    First published: