ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்டது ஈரோடு மேற்கு தொகுதி. ஈரோடு மாநகராட்சியின் 40-க்கும் மேற்பட்ட வார்டுகள் மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. கிராமங்களும், நகரங்களும் சரிபாதி அளவில் உள்ளது.தொகுதி வாக்காளர்களில் விவசாயத்தை 50 சதவீதம் பேரும், சாயம், நெசவு தொழிலை 50 சதவீதம் பேரும் சார்ந்துள்ளனர்.
மறு சீரமைப்பில் உருவான தொகுதி:
2008 இல் தொகுதி மறுசீரமைப்பில் இந்த தொகுதி உருவானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் அதிக வாக்காளர்களைக் கொண்டது ஈரோடு மேற்கு தொகுதி.
வாக்காளர்களின் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள் : 1,42,913
பெண் வாக்காளர்கள் : 1,48,398
மூன்றாம் பாலின வாக்காளர்கள் : 30
மொத்தம் : 2,91,316 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குசாவடிகள் எண்ணிக்கை : 298
கடந்த 2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் அ.தி.மு.க-வை சேர்ந்த கே.வி.இராமலிங்கம் வெற்றிபெற்றார்.
மக்களின் எதிர்பார்ப்பு..
மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். மஞ்சள் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு ஆலைகளை உருவாக்க வேண்டும். மஞ்சள் சேமிப்புக்கு குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். முழுமையாக நிறைவேற்றப்படாத புதை சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிறைவு பெறாத சுற்றுவட்ட சாலைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் போன்றவை வாக்காளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.