• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • TNAssemblyelection2021 | ஈரோடு கிழக்கு தொகுதி ஒரு கண்ணோட்டம்

TNAssemblyelection2021 | ஈரோடு கிழக்கு தொகுதி ஒரு கண்ணோட்டம்

தொகுதி சீரமைப்பிற்கு முன்னதாக ஈரோடு தொகுதியாக  இருந்தபோது தி.மு.க 5 முறையும், அ.தி.மு.க 5 முறையும், காங்கிரஸ் 2  முறையும், பொதுவுடமைக் கட்சி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான தந்தை பெரியார்,  கணித மேதை இராமானுஜன் பிறந்த பெருமைக்குரிய பகுதிகள் உள்ள சட்டமன்ற தொகுதியாக  உள்ளது.

    2008ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை  ஒருங்கிணைந்து ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின் போது ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதி இரண்டாகப் பிரித்து ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என இரு தொகுதிகள்  உருவாக்கப்பட்டது.

    தொகுதி சீரமைப்பிற்கு முன்னதாக ஈரோடு தொகுதியாக  இருந்தபோது தி.மு.க 5 முறையும், அ.தி.மு.க 5 முறையும், காங்கிரஸ் 2  முறையும், பொதுவுடமைக் கட்சி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

    சீரமைப்பிற்கு பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க கூட்டணியே இருமுறை வென்றுள்ளது. 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவைச் சேர்ந்த வி.சி சந்திரகுமார், 2016ம் அ.தி.மு.க-வின் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்ற தொகுதி இது.

    வாக்காளர்கள் எண்ணிக்கை

    ஆண் வாக்காளர்கள்                                       1,10,934

    பெண் வாக்காளர்கள்                                     1,15,987

    மூன்றாம் பாலின வாக்காளர்கள்                   15

    மொத்தம்                                                               2,26,936    வாக்காளர்கள் உள்ளனர்.

    தொழில்

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி ஈரோடு நகரத்துக்கு உள்ளேயே முடிந்து விடக்கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதே நேரம் ஜவுளித் தொழிலின் மையமாக விளங்குகிறது. இதன் மூலம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். துணிகளுக்கு சாயம், சலவை  செய்யும் பணிகள் சார்ந்த  500க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் செயல்படுகின்றன.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கனி மார்கெட் சந்தை திங்கள் இரவு முதல் செவ்வாய் மதியம் ஒரு மணிக்கு செயல்பட்டும். சந்தையில் மட்டும் 2 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநில ஜவுளி வியாபாரிகள் வருவார்கள் வந்து ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்து வழக்கம். அதே சமயம்  பண்டிகை காலங்கள் 5  கோடி ரூபாய் அளவுக்கு  வர்த்தகம் நடைபெறும்.

    மக்களின் கோரிக்கை

    ஈரோடு கிழக்கு பகுதியில்  சாய , சலவை  ஆலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் சுகாதார சீர்கேட்டை மக்கள் அடைந்து வருகின்றனர். இதனால் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு ஆலை அமைக்க 20 ஆண்டுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்தும் செயல்படுத்தவில்லை .

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் , அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் இருந்தும் இதுவரை நிறைவேற்றவில்லை .

    செய்தியாளர்: பாபு


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: