ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் இருக்கும் குன்னூர் சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் இருக்கும் குன்னூர் சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை

நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று குன்னூர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று குன்னூர்.

  • Share this:
    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில்  உள்ள மூன்று தொகுதிகளில் குன்னூர் சட்டமன்ற தொகுதியும் ஒன்று. நீலகிரி மாவட்டத்தில் தனித் தொகுதியாக இருந்த குன்னூர் சட்டமன்றத் தொகுதி 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் குன்னூர் தொகுதி பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா இந்த தொகுதியில்தான் உள்ளது. மத்திய அரசின் பாஸ்டியர் ஆய்வகம்  மற்றும்  வெடிமருந்து தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளது.

    தொழில்

    குன்னூரை பொருத்தவரையில் விவசாயமே இங்கு பிரதான தொழிலாகும். குன்னூரில் முக்கியத் தொழிலாக தேயிலை, மலைகாய்கறி விவசாயம் பார்க்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டப் பணிகளுக்கு செல்கின்றனர்.



    சட்டமன்ற தொகுதி (110) :  குன்னூர்

    வாக்காளர்கள் எண்ணிக்கை

    ஆண் வாக்காளர்கள்  - 91,301

    பெண் வாக்காளர்கள் : 99,999

    மூன்றாம் பாலினத்தவர்கள் - 7

    மொத்தம்   - 1,86,479 வாக்காளர்கள் குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ளனர். குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகம்.

    முக்கிய சுற்றுலா தளங்கள்:

    சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், கேத்திரின் நீர் வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளன.

    குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் 1957-ல்  இருந்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க 9 முறை வெற்றிப்பெற்றுள்ளது. அதிமுக 3 முறை, காங்கிரஸ் 2, தமாக 1 ஒரு முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. குன்னூர் தொகுதி திமுக-வின் கோட்டையாக பார்க்கப்படுகிறது.



     

    குன்னூர் தொகுதி தேர்தல் நிலவரம்

    1957 – மாதே கவுடர்  (காங்கிரஸ்)

    1962  – மாதே கவுடர்   ( காங்கிரஸ்)

    1967 – கவுடர்    ( தி.மு.க)

    1971 -  கருணைநாதன்  (தி.மு.க)

    1977 – ரங்கசாமி  (தி.மு.க)

    1980 – ரங்கநாதன்  (தி.மு.க)

    1984 –  சிவகுமார் – (அ.தி.மு.க)

    1989  - தங்கவேல் – (தி.மு.க)

    1991 -  கருப்பசாமி – (அ.தி.மு.க)

    1996 – தங்கவேல் –  (தி.மு.க)

    1997 – ரங்கநாதன் –  (தி.மு.க)

    2001 – கந்தசாமி – (தமிழ் மாநில காங்கிரஸ்)

    2006 – சவுந்திர பாண்டியன் – (தி.மு.க)

    2011 – ராமசந்திரன் – (தி.மு.க)

    2016 – ராமு – (அ.தி.மு.க)



    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவை சேர்ந்த சாந்தி ராமு 61,650 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாக தி.மு.கவை சேர்ந்த முபாரம் 57,940 வாக்குகள் பெற்றார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் குன்னூர் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

     குன்னூர் தொகுதியின் முக்கிய பிரச்சனைகள்

    சுற்றுலா தளமாக பார்க்கப்படும் குன்னூரில் வாகன நிறுத்துமிடம் இல்லாதது பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. அதனைப்போக்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல் தேயிலைக்கு விலை நிர்ணயம், தேயிலைக்கு மாற்று பயிராக விளங்கும் கொய்மலர்களுக்கு ஏற்றுமதி மையம் ஏற்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி வாக்காளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: