TNAssemblyElection2021 அத்திக்கடவு-அவிநாசி திட்டம்... 60 ஆண்டு கால எதிர்பார்ப்பு -அவிநாசி தொகுதி ஒரு பார்வை

TNAssemblyElection2021 அத்திக்கடவு-அவிநாசி திட்டம்... 60 ஆண்டு கால எதிர்பார்ப்பு -அவிநாசி தொகுதி ஒரு பார்வை

பேருந்து நிலையம் - அவிநாசி

1972-ம்  ஆண்டு, விவசாய சங்கங்கள் சார்பில் பொதுவேட்பாளராக அறிமுகமாகி,  வெற்றிபெற்ற முதல் சுயேட்சை வேட்பாளர் பி.ஓ.பெரியசாமி, இங்குதான் வென்றார். சி.பி.ஐ-யும், தி.மு.க-வும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
திருப்பூர் மாவட்டத்தில் அதிக ஆண்டுகள் தனித் தொகுதியாக இருப்பது அவிநாசி சட்டப்பேரவை தொகுதி தான். அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  31 ஊராட்சிகளும், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 ஊராட்சிகள்  என, மொத்தம் 47 கிராம ஊராட்சிகளும், அவிநாசி, திருமுருகன்பூண்டி, அன்னூர் ஆகிய 3 பேரூராட்சிகளையும் உள்ளடக்கியதாகும். அவிநாசி திருப்பூர் மாவட்டத்திலும், அன்னூர் கோவை மாவட்டத்திலும் உள்ளது.  அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகளவில் அருந்ததியர்கள் உட்பட ஆதி திராவிடர்கள் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். 2-ம் இடத்தில் கொங்கு வேளாளர்களும், 3-வதாக நாயக்கர் மற்றும் இதர வகுப்பினர்களும் உள்ளனர்.

கொங்கு 7 சிவஸ்தலங்களில், பாடல் பெற்ற தலமாக, அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாலிங்கேஸ்வரர் கோயிலும், திருமுருகன்பூண்டி  திருமுருநாதசாமி கோயிலும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன. சிறப்பு வாய்ந்த திருமுருகன்பூண்டியை புரதான நகரமாக, தமிழக அரசு அறிவித்து சீரமைப்பு நிதியும் ஒதுக்கியது. அதேபோல், அன்னூரில் மன்னீஸ்வரர் கோயிலும் வெகு பிரசித்தம்.

அவிநாசி


வாக்காளர்கள் எண்ணிக்கை

ஆண் வாக்காளர்கள்                       133498

பெண் வாக்காளர்கள்                     139805

மூன்றாம் பாலின வாக்காளர்                 1

மொத்தம்                                             273304 வாக்காளர்கள் உள்ளனர்.

 

1957-ம் ஆண்டு நடந்த, சட்டப்பேரவைத் தேர்தலில்  அவிநாசியைச் சேர்ந்த மாரப்பகவுண்டர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். 1962-ம் ஆண்டு தேர்தலிலும் அவரே வென்றார். 1977-ம் ஆண்டு முதல், கடந்த 39 ஆண்டுகளாக தனி தொகுதியாக இருந்து வருகிறது.  தொகுதியில், அ.தி.மு.க 6 முறை வென்றுள்ளது. 1972-ம்  ஆண்டு, விவசாய சங்கங்கள் சார்பில் பொதுவேட்பாளராக அறிமுகமாகி,  வெற்றிபெற்ற முதல் சுயேட்சை வேட்பாளர் பி.ஓ.பெரியசாமி, இங்குதான் வென்றார். சி.பி.ஐ-யும், தி.மு.க-வும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்:

ப. தனபால், (அ.தி.மு.க)  93,366 வாக்குகள்

சி. ஆனந்தன், (தி.மு.க) 62,692   வாக்குகள்

ஆறுமுகம் (இந்தியக் கம்யூனிஸ்ட்) 15016 வாக்குகள்

பெருமாள் (பாஜக) 8081வாக்குகள்

பிரகதீஸ்வரன், (கொமதேக) 4373 வாக்குகள்

நோட்டா 3534 வாக்குகள்



தொழில்

அவிநாசி வட்டாரத்தில் விவசாயம், விசைத்தறி,  பம்பு செட் உற்பத்தி, உள்ளூர் பனியன் உற்பத்தி ஆகியவை பிரதானத் தொழிலாக உள்ளன.  திருமுருகன்பூண்டியில் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.   60 ஆண்டு காலமாக தொகுதி மக்கள் எதிர்பார்த்த அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, முழுவீச்சில் பணிகள் நடைபெறுவது தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். பெருந்துறை- அன்னூர் வரை உள்ள 600 குட்டைகள் விடுபட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்திலேயே இதனையும் இணைக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். திட்டம் முழுமை பெற்றால் மட்டுமே, கிராமங்களும் முழுமை பெறும் என்கின்றனர் தொகுதி மக்கள்.

அவிநாசி, அன்னூர் பகுதி மக்களுக்கு முக்கியமாக பவானி ஆற்றுக்குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் ஒதுக்கீடு செய்த அளவுக்கு குடிநீர் வருவதில்லை. அன்னூர்-அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், முடிவடையும் தருவாயில் இருப்பதால்  நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும்.

மக்களின் எதிர்பார்ப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியை தொகுதியில் ஏற்படுத்த வேண்டும்.  அவிநாசி ஊராட்சியை இரண்டாகப் பிரி்த்து, சேவூரை மையமாக வைத்து, தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்தல், சேவூரில் பேருந்து நிலையம், அவிநாசியை நகராட்சியாக்குதல், விசைத்தறி தொழிற்பேட்டை, புரதானக் கோயில் புனரமைப்பு,  குளம், குட்டைகள் தூர்வாருதல் பணிகள் நடைபெறவில்லை என ஏமாற்றம் எஞ்சியுள்ளது மக்களிடம். சட்டப்பேரவைத் தலைவர் தொகுதி என்பதால், கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதேசமயம் தட்டுபாடற்ற குடிநீருக்கும் சிரமப்பட வேண்டியிருப்பதாக கருதுகின்றனர் தொகுதி மக்கள்.

செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர்
Published by:Ramprasath H
First published: