20+ கேட்கும் தேமுதிக.. நோ சொல்லும் அதிமுக.. தொகுதி உடன்பாட்டில் இழுபறி

20+ கேட்கும் தேமுதிக.. நோ சொல்லும் அதிமுக.. தொகுதி உடன்பாட்டில் இழுபறி

அதிமுக மற்றும் தேமுதிக இடையேயான இன்றைய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகின்றது.

  • Share this:
அதிமுக மற்றும் தேமுதிக இடையே இன்று நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் தங்கமணி இல்லத்தில் இன்று மாலை அதிமுக மற்றும் தேமுதிக இடையே இரண்டாம்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும், தேமுதிக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் ஆகியோரும் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.  பின்னர் தேமுதிக நிர்வாகிகள் அமைச்சர் தங்கமணி இல்லத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். பேச்சுவார்த்தையில் தேமுதிக 20 இடங்களுக்கு மேல் கேட்டுள்ளதாகவும் ஆனால் அதற்கும் குறைவான இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் அதிமுக மற்றும் தேமுதிக இடையேயான இன்றைய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகின்றது.

அதேப்போன்று அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக-வும் அதிக இடங்கள் கேட்பதால் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
Published by:Vijay R
First published: