அதிமுக தான் கூட்டணிக்காக தேமுதிக பின்னாடி வருகிறார்கள் - எல்.கே.சுதிஷ்

எல்.கே சுதீஷ்

எங்களிடம் கூட்டணிக்காக வாருங்கள் என்று பல கட்சியிடமிருந்து எனக்கு போன் வந்து கொண்டிருக்கிறது என்றார் சுதிஷ்.

  • Share this:
    2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது என்றும் இன்று கூட நாம் அதிமுக பின்னாடி கூட்டணிக்காக போகவில்லை, அவர்கள் தான் நாம் பின்னாடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் உரையாற்றி உள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று தேமுதிக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்க்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதிஷ், கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் நாம் அதிமுக கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியை இருந்திருக்காது என்று தொண்டர்கள் மத்தியில் ஆரவாரமாக பேசினார்.

    மேலும்  வரும் தேர்தலில் கூட நாம் கூட்டணிக்காக அதிமுக பின்னாடி செல்லவில்லை, அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகின்றனர். எங்களிடம் கூட்டணிக்காக வாருங்கள் என்று பல கட்சியிடமிருந்து எனக்கு போன் வந்து கொண்டிருக்கிறது. அதிமுக நினைக்கலாம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று ஆனால் மற்ற ஜாதி நிலைமை என்னவாகும் என்று நினைக்க வேண்டும் என்றார்.
    Published by:Vijay R
    First published: