வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாத ஒரு நபர் முதல்வராக உள்ளார். - ஆ.ராசா விமர்சனம்

வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாத ஒரு நபர் முதல்வராக உள்ளார். - ஆ.ராசா விமர்சனம்

ஆ.ராசா

தமிழகத்தில் எந்த திட்டம் அறிவித்தாலும், அது எடப்பாடி பழனிச்சாமியும் சொந்த புத்தியால் அறிவித்தது இல்லை, ஸ்டாலின் தந்த புத்தியால் அறிவித்தது.

  • Share this:
வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாத ஒரு நபர் முதல்வராக உள்ளார் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போதுஆ.ராசா விமர்சித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்ட எழும்பூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராஜா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர்,

தற்போது அண்ணா, எம்.ஜி.ஆர் ஆட்சியை அளிப்போம் என்று கூறாமல், ஜெயலலிதா ஆட்சியை அளிப்போம் என்று கூறுகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சிக்கு இரண்டு அடையாளம் உள்ளது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்ற அடையாளமும், தமிழகத்தில் லேடி(ஜெயலலிதா) ஆட்சி இருந்தவரை மோடி பாட்சா இங்கு பலிக்கவில்லை. தமிழகத்தின் உரிமைகளை ஜெயலலிதா விட்டு கொடுத்தது இல்லை ஜெயலலிதா ஆளுமை மிக்கவர், மாநில உரிமைகளை விட்டு கொடுக்காத ஆளுமை மிக்க தலைவர் ஜெயலலிதா. எனவே இந்த 2 அடையாளங்களில் எந்த ஆட்சியை அதிமுக அரசு அளிக்க போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

தற்போது உள்ள அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் மாநில உரிமைகளை காப்பாற்ற முடியாமல் மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கிறது அதிமுக அரசு.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் போது அனைத்து அமைச்சர்களும், முதல்வரும் போய் வரவேற்கின்றனர். கடந்த ஆண்டுகளில்  உள்துறை அமைச்சர் வரும்போது இதுபோன்று வரவேற்பு அளித்தது உண்டா?

திமுக ஆட்சியில் சுகாதாரம் முதல் இடத்தில் இருந்தது. எனவே மீண்டும், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழகம் முதலிடம் வருவதற்கு ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் அமைந்ததால் முடியும் என்றார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, நீட் தமிழகத்திற்கு கிடையாது, உதய் திட்டம் வராது, நிவாரண நிதிகளை முழுவதுமாக அளிக்கிறேன் என்று மோடி கூறினால், அவரை சிவப்பு கம்பளம் விரித்து, விமான நிலையம் சென்றே திமுக சார்பில் வரவேற்போம் என்றார்.

தமிழகத்தில் எந்த திட்டம் அறிவித்தாலும், அது எடப்பாடி பழனிச்சாமியும் சொந்த புத்தியால் அறிவித்தது இல்லை, ஸ்டாலின் தந்த புத்தியால் அறிவித்தது. விரைவில் ஆட்சி மாற்றம் வந்தவுடன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஜெயிலுக்கு செல்லுவார் என்றும், மின்சாரத்துறையில் மிகப்பெரிய கொள்ளையை அவர் அடித்துள்ளார்.

திமுகவிற்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன். யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது.
அதனால் தான் வேல் கொடுக்கும் போது ஸ்டாலின் வாங்கினார்.
திமுக வரி பணத்தில், வெற்றி நடைபோடு தமிழகமே என்று பொய்யாக விளம்பரம் செய்வதை எதிர்த்து, ஸ்டாலின் அனுமதியோடு வழக்கு தொடரப்படும் என்றார்.
தமிழகத்தில் மேம்பாலம் பணிகளில் ஆமை வேகத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதி கட்கரியே கூறியுள்ளார்.
ஆனால் தமிழகம் முன்னேறி வருவதாக இங்குள்ள அரசு கூறி வருகிறது.

ஒரு எடப்பாடி அல்ல, 7 எடப்பாடி வந்து தமிழகத்திற்கு மோடி அழைத்து வந்தாலும், தமிழகத்தில் தாமரை மலர முடியாது.
ஜெயலலிதா ஊழல்வாதி, அதனால் தான் ஜெயலலிதா நினைவிடம் திறப்பதற்கு மோடி வரவில்லை என்றார்.

 
Published by:Vijay R
First published: