தமிழக சட்டமன்ற தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி 13.8 % வாக்குகள் பதிவு

கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.8 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.8 சதவீத வாக்குகள் பதிவாகி வருகிறது. கொரோனா மற்றும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: