தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைபாவையாக உள்ளது - கே.எஸ்.அழகிரி காட்டம்

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைபாவையாக உள்ளது - கே.எஸ்.அழகிரி காட்டம்

கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தி, ஸ்டாலின் என கூட்டணி கட்சித்தலைவர்கள் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • Share this:
அதிமுக பெயரில் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை வேளச்சேரியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குவதாகவும்,ஏப்ரல் 3-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தில், மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், மல்லிகா அர்ஜீன் கார்கே, கர்நாடக முன்னாள் தலைவர் சித்தராமையா, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெவித்தார்.

இந்த தேர்தலில் முக்கியமான நோக்கம் தமிழகத்தை, தமிழகம் ஆள வேண்டுமா டெல்லி ஆள வேண்டுமா என்பது தான் என தெரிவித்த அவர், பன்முக தன்மை கொண்ட இந்தியாவை பாஜக சிதைக்க நினைக்கிறது என்றார். மேலும், அதிமுக பெயரில் 234 தொகுதியிலும் பாஜக தான் போட்டியிடுகிறது என விமர்சித்தார்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும், ராகுல் காந்தி, ஸ்டாலின் என கூட்டணி கட்சித்தலைவர்கள் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தான் ஊர்ந்து சென்று பதவி வாங்கவில்லை என முதல்வர் பேசியுள்ளதற்கு பதிலளித்த அழகிரி,பதவியை ஊர்ந்து சென்றோ, நடந்து சென்றோ வாங்க கூடாது. பதவி என்பது தகுதியால் பெறவேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவினர் நாங்குநேரி இடைத்தேர்தலில், ஒவ்வொரு தெரு முனையில் இருந்து கொண்டு பணம் பட்டுவாடா செய்ததாலவும், தான் கண்ணால் பார்த்தேன் என்றார்.  தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் யாதவ் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். உண்மைதான்.இது வருத்தப்படவேண்டிய விஷயம் தான். அடுத்த முறை அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். அனைவரும் கொள்கைகளை நினைத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.
Published by:Vijay R
First published: