கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் அதிமுக உடன் கூட்டணி - தேமுதிக திட்டவட்டம்

கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் அதிமுக உடன் கூட்டணி - தேமுதிக திட்டவட்டம்

தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு கொடுக்க வேண்டியிருப்பது என்று அதிமுக சொன்னதால் தற்போது 25 தொகுதி வரை கேட்டிருக்கிறோம்.

 • Share this:
  அதிமுக உடனான தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் பேச்சுவார்த்தை சுமுகமான நடந்து வருகிறது என்றும் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் மட்டுமே அதிமுக உடன் கூட்டணி என்றும் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

  அதிமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தேமுதி துணை செயலாளர் பார்த்தசாரதி, அதிமுக உடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையின் போது 40 சீட்கள் வரை கேட்டோம். ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு கொடுக்க வேண்டியிருப்பது என்று அதிமுக சொன்னதால் தற்போது 25 தொகுதி வரை கேட்டிருக்கிறோம். மேலும் ராஜ்யசபா சீட் கேட்டும் அதிமுகவில் கோரிக்கை வைத்துள்ளோம்.

  அதிமுக உடன் இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தேமுதிக கேட்கும் தொகுதியை ஒதுக்கினால் மட்டுமே அதிமுக உடன் கூட்டணி தொடரும். எண்ணிக்கை உறுதியானால் மட்டுமே எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றார். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. எல்.கே.சுதீஷ் கருத்து உட்கட்சியில் அவர் பேசியது அதற்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கும் எந்த சிக்கலும் இல்லை என்றார்.
  Published by:Vijay R
  First published: