“நாளையே ரஜினி கட்சி தொடங்குவார், ஆனால்...“ - தமிழருவி மணியன்

நடித்துக்கொண்டிருந்த படத்தினை முடித்து விட்டு தான் முதல்வர் பதவியினை ஏற்றுக்கொண்டார் எம்.ஜி.ஆர் . அவருகக்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா?

“நாளையே ரஜினி கட்சி தொடங்குவார், ஆனால்...“ - தமிழருவி மணியன்
ரஜினிகாந்த்
  • Share this:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆட்சியிலிருந்து இறங்கினால் நாளையே கட்சி தொடங்கி  ரஜினிகாந்த்த அரசியலுக்கு வருவார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னயைில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் அரசியல் கட்சி தொடங்கிய பின்னும் நடித்தார். அரசியலில் இருக்கும் போதும் நடித்தார். நடித்துக்கொண்டிருந்த படத்தினை முடித்து விட்டு தான் முதல்வர் பதவியினை ஏற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர்.க்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா?

தற்போது இரண்டு படங்களில் ரஜினி நடித்து வருகிறார். தீபாவளிக்கு ஒன்றும் பொங்கலுக்கும் ஒன்று வெளியாகிறது. நடிகர் ரஜினி படங்களை நடித்து முடித்து விட்டு அடுத்த தீபாவளிக்கு பின்னர், தீவிர அரசியலில் ஈட்டுபடுவார். தமிழகம் முழுவதும் வலம் வருவார். ரஜினி மக்களிடம் நடிக்கிறார். மக்களை ஏமாற்றுவதற்காக நடிக்கவில்லை“ என்று தமிழருவி மணியன் கூறினார்.


Also Watch

First published: October 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading