முகப்பு /செய்தி /அரசியல் / தேமுதிக விலகியதால் கூடுதல் இடங்களை பாஜக பெற வாய்புள்ளதா? எல்.முருகன் பதில்

தேமுதிக விலகியதால் கூடுதல் இடங்களை பாஜக பெற வாய்புள்ளதா? எல்.முருகன் பதில்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

அதிமுக, கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடும் தொகுதியை அடையாளம் காண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகி உள்ள நிலையில் கூடுதல் இடங்களை பாஜக பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதிலளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 23 தொகுதிகளும், பாஜக-விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக உடனான தொகுதிதி பங்கீட்டில் இழுபறி நீடித்து கொண்டே வந்தது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 40 தொகுதிகள் கேட்ட தேமுதிக இறுதியாக பாமக, பாஜக கட்சிகளுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

ஆனால் அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாத நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது.

தேமுதிக-வின் இந்த முடிவை தொடர்ந்து அதிமுக, கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடும் தொகுதியை அடையாளம் காண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டிலுள்ள தமிழக பாஜக தேர்தல் அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் பேட்டியளித்தார். அப்போது,

தேமுதிக விலகியதால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. எங்கள் கூட்டணி வெற்றி பெறும். விரைவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றார. மேலும் தேமுதிமுக விலகியதால் கூடுதல் இடங்களை பாஜக பெற வாய்புள்ளதா என்ற கேள்விக்கு இது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

First published:

Tags: BJP, L Murugan, TN Assembly Election 2021