Home /News /politics /

நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி Vs சுவேந்து அதிகாரி: மேற்குவங்க தேர்தலின் உச்சகட்டம்!

நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி Vs சுவேந்து அதிகாரி: மேற்குவங்க தேர்தலின் உச்சகட்டம்!

நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி  Vs சுவேந்து அதிகாரி

நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி Vs சுவேந்து அதிகாரி

பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையிலான வார்த்தை மோதலில் நந்திகிராம் தொகுதியில் மமதா போட்டியிடுவாரா என்ற சவாலை பாஜக முன் வைத்தது. ஒரு வேளை நந்திராமில் மமதா பானர்ஜி போட்டியிட்டால் அவரை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் என்று சுவேந்து அதிகாரி சூளுரைத்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மேற்குவங்க மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இதில் முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.



உச்சகட்ட தேர்தல் களமாக மாறியிருக்கும் மேற்குவங்கத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடேறி வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், ஆட்சியை பிடிக்க முயலும் பாஜகவுக்கும் இடையே வாழ்வா சாவா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையிலான வார்த்தை மோதலில் நந்திகிராம் தொகுதியில் மமதா போட்டியிடுவாரா என்ற சவாலை பாஜக முன் வைத்தது. ஒரு வேளை நந்திராமில் மமதா பானர்ஜி போட்டியிட்டால் அவரை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் என்று சுவேந்து அதிகாரி சூளுரைத்தார்.

அதனை ஏற்று நந்திகிராம் தொகுதியில் மமதா பானர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் தனது சொந்த தொகுதியான கொல்கத்தாவின் பவானிபூரில் போட்டியிடுவதை கைவிட்டுள்ளார். நேற்று திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்ட 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் 50 பெண்கள், 42 இஸ்லாமியர்கள், 79 தாழ்த்தப்பட்டோர் மற்றும் 17 பழங்குடியின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாஜகவும் தன் பங்குக்கு நந்திராமில் வேட்பாளராக சுவேந்து அதிகாரியை களமிறங்கி உள்ளது. இன்று மாலை பாஜக தன் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது . 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய அளவில் நட்சத்திர தொகுதியாக நந்திகிராம் மாறியுள்ளது. அங்கு சுவேந்து அதிகாரி Vs மமதா பானர்ஜி என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் மமதா பானர்ஜியின் வலதுகரமாக திகழ்ந்த சுவேந்து அதிகாரி மமதா பானர்ஜியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அக்கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். தற்போது மமதாவை எதிர்த்து போட்டியிடுகிறார். இதன் முடிவு என்ன என்பது மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தெரியவரும்.
Published by:Arun
First published:

Tags: BJP, Mamata banerjee, TMC, West Bengal Assembly Election 2021

அடுத்த செய்தி