சசிகலா சிறையில் இருந்து வந்தால் அதிமுகவினர் அவர் பக்கம் செல்வார்கள் - சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

 • News18
 • Last Updated :
 • Share this:
  சசிகலா சிறையில் இருந்து வெளியேவந்தால் அதிமுகவினர் சசிகலா பக்கம் போவார்கள் என எதிர்பார்கின்றேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் கூறியுள்ளார்.

  சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமனியன் சுவாமி, மஹாராஷ்டிரா விவகாரம் குறித்து எனக்கு தகவல் தெரியாது. சென்னை வந்த பிறகு தான் விவரம் சொன்னார்கள். அந்த அரசியலில் முதலில் இருந்தே நான் கவனம் செலுத்தவில்லை. ஆகையால், அதில் இப்போது ஏதும் கருத்து கூற முடியாது என்று  கூறினார்.

  ரஜினியின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு, “சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப்போவது இல்லை. படம் வெளிவரும் போது விளம்பரத்திற்காக பேசுவார்கள். வரேன் வரேன்னு பலமுறை கூறி வருகிறார். ஆனால் இதுவரை ஏதும் நடந்தபாடில்லை” என்று பதிலளித்தார்

  ரஜினி-கமல் இணைவதாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு ”சினிமா வசனங்கள் கேட்டு கேட்டு அலுத்துவிட்டது” என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

  சசிகலா இன்னும் ஒன்று அல்லது ஒன்னறை ஆண்டுக்குள் விடுதலையாகி வருவார். கட்சியை நல்ல முறையில் அமைப்புகளோடு நடத்த சசிகலாவுக்கு திறமை உள்ளது. அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
  Published by:Sankar
  First published: