ஸ்டாலினின் பதவியாசை முடிந்துவிட்டது - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன்

"சீன பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

ஸ்டாலினின் பதவியாசை முடிந்துவிட்டது - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன்
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன்
  • News18
  • Last Updated: October 24, 2019, 3:31 PM IST
  • Share this:
நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கூறி ஸ்டாலின் வெற்றி பெற்றதை போல் இதிலும் வெற்ற பெற நினைத்து ஏமாந்துவிட்டார். இதோடு ஸ்டாலினின் பதவியாசை முடிந்துவிட்டது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண் கூறியுள்ளார். 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதியில் உள்ள 12 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருபப்பணன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கங்களின் 2800 உறுப்பினர்களுக்கு 59 லட்சம் போனஸ் வழங்கினார்.

அப்போது பேட்டியளித்த கருப்பணன் “விக்ரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வெற்றியை மக்கள் அதிமுகவிற்கு தந்துள்ளனர். அதற்கு சுற்றுச்சூழல் துறை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.


மேலும் தொடர்ந்த அவர் “நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கூறி ஸ்டாலின் வெற்றி பெற்றார் அதே நிலை தொடரும் என நினைத்து ஏமாந்துவிட்டார். ஸ்டாலினின் பதவியாசை முடிந்துவிட்டது” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து சீன பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பார்க்க :தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் – முழு விவரம்

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading