மிருக பலத்தோடு பாஜக இருப்பதால் நினைக்கின்ற சட்டத்தை அமல்படுத்துகிறார்கள்: மு.க. ஸ்டாலின்

மிருக பலத்தோடு பாஜக இருப்பதால் நினைக்கின்ற சட்டத்தை அமல்படுத்துகிறார்கள்: மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • Share this:
நாடாளுமன்றத்தில் மிருக பலத்தோடு பாஜக இருப்பதால், அவர்கள் நினைக்கின்ற சட்டத்தை அமல்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிடோர் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மை சமூகத்திற்கு ஆதரவாக இருக்கும் என்றார்.

இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக குடியுரிமை திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் மிருக பலத்தோடு இருப்பதால், பாஜக நினைக்கின்ற சட்டத்தை அமல்படுத்தி வருவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.First published: December 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading