• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு அவர் ஜாதகத்திலும் இல்லை- எச்.ராஜா

ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு அவர் ஜாதகத்திலும் இல்லை- எச்.ராஜா

எச்.ராஜா

எச்.ராஜா

மு.க.ஸ்டாலின் மக்கள் சபை கூட்டம் உட்பட எந்த கூட்டம் நடத்தினாலும், அவருக்கு முதல்வராகும் வாய்ப்பு இல்ல என்றார் எச்.ராஜா.

  • Share this:
    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்கள் சபை கூட்டம் உட்பட எந்த கூட்டம் நடத்தினாலும், அவருக்கு முதல்வராக வாய்ப்பு இல்லவே இல்லை என்றும்,  அவர் ஜாதகத்திலும் அதற்கான வாப்பு இல்லை என்றும் பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

    விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் 224-ஆவது நினைவு தினம் சிவகங்கை அரண்மனை வளாகத்திற்கு எதிரே அனுஷ்டிக்கப்படுகிறது. அங்கே, அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், சிவகங்கை பொதுமக்கள், அரண்மனை குடும்பத்தினர் என பலதரப்பு மக்களும் வீர வணக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன்படி, திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், அங்கே அஞ்சலி செலுத்திய பாஜகவின் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார், அப்போது, ‘வீரமங்கை வேலுநாச்சியார் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிட்ட முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அவரது நினைவு நாளில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினோம். வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு மறைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு நமது பாட புத்தகங்களில் கார்வெல் முகல் பேரரசு போன்றவர்களைப் பற்றிய பாட புத்தகத்தில் இருக்கிறது.

    தமிழ மண்ணின் மன்னர்களைப் பற்றிய வரலாறு பாட புத்தகத்தில் இல்லை. தமிழ் மன்னர்களின் வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். பாபருக்கு மகன் யார் என்று புத்தகத்தில் இருக்கு ஆனால் ராஜராஜ சோழனுக்கு அப்பா யார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை. இப்படி தமிழக பாட புத்தகத்தில் வரலாற்று சிறப்புமிக்கவர்களின் பாடங்கள் புத்தகத்தில் இடம் பெறவேண்டும்’ என்றார்.‘

    பின்னர், ஸ்டாலின் மக்கள் சபை கூட்டம் நடத்துவது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, ‘மக்கள் முடிவாக இருக்கிறார்கள் ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு இல்லவே இல்லை. அவர் ஜாதகத்திலும் அது இல்லை’ என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: