ஸ்டாலின் தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு, ஸ்டாலின்தான் வர்றாரு விடியலை தர போறாரு- டான்ஸ் ஆடிய திமுக எம்.பி., எம்.எல்.ஏ.

ஸ்டாலின் தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு, ஸ்டாலின்தான் வர்றாரு விடியலை தர போறாரு- டான்ஸ் ஆடிய திமுக எம்.பி., எம்.எல்.ஏ.

மு.க.ஸ்டாலின்

தர்மபுரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கான மைதானத்தில் தொடங்கி ஒட்டப்பட்டி, அதியமான்கோட்டை வழியாக நல்லம்பள்ளி வரை செல்லும் வகையில் பிரச்சார சைக்கிள் பேரணிக்கு நேற்று திமுக ஏற்பாடு செய்திருந்தது.

  • Share this:
    தர்மபுரியில் திமுக சார்பில் நேற்று நடந்த சைக்கிள் பிரச்சார பேரணி தொடக்க நிகழ்ச்சியின் போது எம்எல்ஏ-வும், எம்.பி-யும் கட்சியினருடன் இணைந்து டான்ஸ் ஆடிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

    இந்த பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏ-வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    பேரணியை தொடங்கி வைக்கும் முன்பாக இருவரும் கட்சியினருடன் இணைந்து சில நிமிடங்கள் நடனம் ஆடி பேரணியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினர். இந்தக் காட்சிகள் கட்சியினரால் உடனடியாக சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு வைரலாக பகிரப்பட்டது.

    தர்மபுரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கான மைதானத்தில் தொடங்கி ஒட்டப்பட்டி, அதியமான்கோட்டை வழியாக நல்லம்பள்ளி வரை செல்லும் வகையில் பிரச்சார சைக்கிள் பேரணிக்கு நேற்று திமுக ஏற்பாடு செய்திருந்தது. இந்த பேரணியில் பங்கேற்க திமுக நிர்வாகிகளும், கட்சி உறுப்பினர்களும் சைக்கிள்களுடன் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நேற்று காலை திரண்டனர்.

    தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசார பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த கட்சியினர் தங்களது கொள்கைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் பிரசார பாடலாக உருவாக்கி உள்ளனர். அதன்படி தி.மு.க. சார்பில் பிரசார பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் ‘ஸ்டாலின் தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு, ஸ்டாலின்தான் வர்றாரு விடியலை தர போறாரு' என்ற வரிகளுடன் பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரசார பாடலை ஒலி-ஒளி காட்சியாக பொதுமக்களிடையே வெளிப்படுத்தும் வகையில் தி.மு.க.வினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் அவ்வை கோட்டம் முன்பு தி.மு.க. பிரசார பாடல் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் அந்த பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
    Published by:Muthukumar
    First published: