அமைச்சர்களின் தொகுதிகளை குறிவைத்து இன்று முதல் ஸ்டாலின் பிரச்சாரம்..

மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் 5 அமைச்சர்களின் சொந்த தொகுதிகளை குறிவைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்த இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  அமைச்சர்களின் தொகுதிகளை குறிவைத்து...தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கரூர், கோவை, ஈரோடு, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

  இந்நிலையில், இன்று காலை அமைச்சர் கே.பி.அன்பழகனின் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியிலும், மாலையில் முதலமைச்சர் பழனிசாமியின் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்கள் கிராம சபை நடைபெற உள்ளது. மேலும் 8ஆம் தேதி காலையில் அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதியிலும், அன்று மாலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியிலும் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... அரசு மருத்துவமனைகள் சாக்கடை போல் உள்ளன: கமல் விமர்சனம்

  9ஆம் தேதி காலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியிலும், அன்று மாலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி தொகுதியிலும், 10ஆம் தேதி காலையில் அமைச்சர் ஜெயக்குமாரின் ராயபுரம் தொகுதியிலும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

  வரும் நாட்களில் ஸ்டாலின் நடத்த உள்ள மக்கள் கிராம சபை கூட்டங்கள் அனைத்தும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் தொகுதிகளை குறிவைத்து நடைபெற இருப்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: