வேட்பாளர் அறிவோம்: தென்சென்னை தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

சுமதி என்ற இயற்பெயர் கொண்டவர், தமிழச்சி என்ற புனைப்பெயரில் இலக்கிய உலகில் செயல்பட்டு வருகிறார்.

வேட்பாளர் அறிவோம்: தென்சென்னை தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்.பி.
  • News18
  • Last Updated: March 29, 2019, 12:56 PM IST
  • Share this:
தென்சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

நடனக் கலைஞர், இலக்கியவாதி, மேடைப்பேச்சாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

தி.மு.க குடும்பம் என்றே அறியப்படும் தமிழச்சியின் தந்தை தங்கப்பாண்டியன் அண்ணா தலைமையிலான தி.மு.க-வில் எம்.எல்.சி ஆக இருந்தவர். பின்னர் திமுக எம்.எல்.ஏ ஆக 1989 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று பதவி வகித்தவர்.


தமிழச்சியின் அண்ணன் தங்கம் தென்னரசுவும் திமுக அரசில் அமைச்சராக இருந்தவர்தான். சுமதி என்ற இயற்பெயர் கொண்டவர், தமிழச்சி என்ற புனைப்பெயரில் இலக்கிய உலகில் செயல்பட்டு வருகிறார்.

2008-ம் ஆண்டில் திமுக-வின் நெல்லை மாநாட்டில் கட்சியின் கொடியேற்றியதன் மூலம் அரசியலுக்குள் முழுநேரமாகக் களம் இறங்கிய தமிழச்சிக்கு தற்போது தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கான திமுக வேட்பாளர் சீட் வழங்கப்பட்டுள்ளது.
First published: March 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading