`மன்னிப்பு மட்டும் போதாது!’ - `தாண்டவ்’ வெப் சீரிஸ் குழுவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பா.ஜ.க

தாண்டவ்

இந்துக்களின் உணர்வுகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், சிவசேனா தற்போது உணர்வுகளை மதிக்காத கட்சிகளுடன் ஆட்சியில் உள்ளது.

 • Share this:
  அமேசான் பிரைமில் கடந்த வெள்ளிக்கிழமை `தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. இந்த வெப் சீரிஸில் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா மற்றும் சுனில் கரோவர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். `ஆர்டிகிள் 15’ படத்தி கதாசிரியரான கௌரவ் சொலாங்கி எழுத்தில் அலி அப்பாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்து மதக் கடவுள்களை இந்த வெப் சீரிஸில் தவறாக சித்தரித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் புகார்களை எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  `தாண்டவ்’ தொடருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யாவிட்டால் அடுத்த மூன்று நாள்களுக்குள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக பா.ஜ.க மகாராஷ்டிராவில் ஆளும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் அலி அப்பாஸ் மன்னிப்பு கோரிய போதிலும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

  பா.ஜ.க தலைவர் ராம் கதம் இதுதொடர்பாக பேசும்போது, ``அமேசான் நிறுவனத்துடன் நாங்கள் தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசி அழுத்தம் கொடுக்க வேண்டியது இருந்தது. இதனால், `தாண்டவ்’ தொடரின் குழு மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள வேண்டியது இருந்தது. ஆனால், மன்னிப்பு மட்டும் போதாது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறோம். அவர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்பும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம். #BanAmazonproducts என்ற பிரசாரத்தை நாங்கள் தீவிரப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

  பா.ஜ.க-வின் ஊடகப் பிரிவுத் தலைவர் விஸ்வாஸ் பதக் இதுதொடர்பாக பேசும்போது, "சிவசேனா தனது இந்துத்துவ கொள்கைகளை மறந்துவிட்டது. இந்துக்களின் உணர்வுகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், சிவசேனா தற்போது உணர்வுகளை மதிக்காத கட்சிகளுடன் ஆட்சியில் உள்ளது. மாநில அரசு வழக்கு பதிவு செய்யாவிட்டால் எங்களது எதிர்ப்பை தீவிரப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ், கதாசிரியர் கௌரவ் சொலாங்கி மற்றும் தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதால் `தாண்டவ் தொடரை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க-வைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் கோடக் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஓடிடி தளங்களில் இந்துமதக் கடவுள்களை தவறாக சித்தரித்து வருவதாகவும் குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். இதனிடையே,  சமூக வலைதளங்களில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்கு கட்டுப்பாடுகள் வைப்பதற்கான தேவைகள் அதிகரிப்பதாகவும் விவாதங்கள் எழுந்து வருகின்றன. கட்டுப்பாடுகள் வரும் பட்சத்தில் கருத்து சுதந்திரம் பாதிப்படையும்  என்றும் பெரும்பாலனவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: