கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மகளிர் பேரணியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணித்த படி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மகளிர் பேரணி இன்று நடைபெற்றது. இந்த மகளிர் பேரணியில் ஏராளமான பெண்கள் இருசக்கர வாகனத்திலும் , நடை பயணமாகவும் பங்கேற்றனர். ராஜவீதியில் துவங்கிய பேரணி தெப்பகுளம் மைதானம் வரை நடைபெற்றது.
இந்த மகளிர் பேரணியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பங்கேற்றார். சிறிது தூரம் பிரச்சார வாகனத்தில் வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பின்னர் இரு சக்கர வாகனத்தில் பயணித்த படியே வாக்கு சேகரித்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வேட்பாளர் வானதி சீனிவாசனும் பயணித்தார்.
தெப்பக்குளம் மைதானத்தில் மகளிர் பேரணி நிறைவடைந்தது.
பின்னர் கூட்டத்தினர் மத்தியில் பேசிய வானதி சீனிவாசன் ‘
மக்கள் சேவை மையம் மூலம் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றோம். எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் வேலை பார்த்தால் அகில இந்திய தலைவர் பதவி கூட கிடைக்கும் என்பதற்கு நான் உதாரணம்.
நெசவாளர்கள், ஐவுளித்துறை என சார்ந்த கோரிக்கைகள் குறித்து எந்த உதவி கேட்டாலும் உடனடியாக செய்பவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி. ஐவுளி தொழிலை உலக அளவில் கொண்டு செல்ல எப்போதும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி உதவுவார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.