வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

வானதி சீனிவாசன்

தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள திட்டங்களை குஜராத்தி மற்றும் ஹிந்தி மொழியில் விளக்கினார்.

  • Share this:
வானதி சீனிவாசனுடன் நடிகர் கமல் பொது விவாதத்திற்கு தயாரா, யார் சொல்லும் திட்டங்கள் சிறந்தது என அதில் முடிவு செய்யலாம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சவால் விட்டுள்ளார்.

கோவையில் மகளிர் பேரணியில் பங்கேற்பதற்காக வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி, குஜராத் சமாஜ் கட்டிடத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். வடமாநில மக்களுடன் தாண்டியா நடனமாடிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பின்னர் வடமாநில மக்கள் மத்தியில் பேசினார். அப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள திட்டங்களை குஜராத்தி மற்றும் ஹிந்தி மொழியில் விளக்கினார். தமிழகத்திற்கு 11 மருத்துவகல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனைகளை இந்த மத்திய அரசு வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

வானதி சீனிவாசனுடன், நடிகர் கமல்ஹாசன் பொதுவிவாத்திற்கு தயாரா என கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, யார் சொல்லும் பிரச்னைகள், தீர்வுகள், வளர்ச்சி திட்டங்கள் சிறந்தது என பொது விவாததில் யாருடைய கருத்துகள் சரியானது என விவாதிக்கலாம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் கமலஹாசனை மட்டும் விமர்சிப்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், காங்கிரஸ் எங்களுடன் போட்டியில் இல்லை எனவும், கமல் மட்டும் போட்டியில் இருப்பதால் அவரை விமர்சிக்கின்றோம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி தெரிவித்தார்.
Published by:Ramprasath H
First published: