உத்தவ் தாக்கரேயை விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு சேலை அணிவிப்பு: சிவசேனா தொண்டர்கள் ஆவேசம்- 17 பேர் கைது

பாஜக நிர்வாகியைத் தாக்கும் சிவசேனா தொண்டர்கள்.

இது சிவசேனா நடத்தும் முதல் தாக்குதல் அல்ல. செப்.2020-ல் நேவி ஆபீசர் ஒருவர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்தார் என்பதற்காக துரத்தி துரத்தி அடிக்கப்பட்டதும் சமூக ஊடகங்களில் வைரலானது.

 • Share this:
  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பற்றி விமர்சித்ததாகக் கூறி பாஜக நிர்வாகி ஒருவர் மீது சிவசேனா தொண்டர்கள் கருப்பு மையை ஊற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

  இந்தச் சம்பவத்துக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பவே தற்போது இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

  பின்னர் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற சிவசேனா தொண்டர்கள் அந்த நபருக்கு வலுக்கட்டாயமாக சேலை அணிவிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக சிவசேனா கட்சித் தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.

  சாலையின் நடுவே அந்த பாஜக நிர்வாகியை வழிமறித்து அவர் மீது கருப்பு மை ஊற்றினர். மேலும் சேலை அணிவித்து இழுத்து வந்தனர்.

  இந்த வன்முறை சம்பவத்திற்கு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் ராம் கதம் வலியுறுத்தியுள்ளார்.

  மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கும் பாஜகவுக்கும் கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது, இந்நிலையில் பாஜக நிர்வாகி மீது கருப்பு மையை ஊற்றியும் சேலை அணிவித்தும் அவமானப்படுத்தியதற்காக 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

  சிவசேனா தொண்டர்களின் இந்த ஆவேசச் செயல் சமூக ஊடகங்களில் வீடியோவாக வளைய வந்தது, நெட்டிசன்கள் இருதரப்பினரையும் கடுமையாக விமர்சித்தனர்.

  இது சிவசேனா நடத்தும் முதல் தாக்குதல் அல்ல. செப்.2020-ல் நேவி ஆபீசர் ஒருவர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்தார் என்பதற்காக துரத்தி துரத்தி அடிக்கப்பட்டதும் சமூக ஊடகங்களில் வைரலானது.

  இந்நிலையில் ஆளும் சிவசேனாவின் வன்முறைகள் அதிகரித்திருப்பதாக மகாராஷ்டிராவில் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: