‘நிஜமான வங்கப் புலி’ மமதா பானர்ஜி என புகழாரம்; மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு சிவ சேனா ஆதரவு!

‘நிஜமான வங்கப் புலி’ மமதா பானர்ஜி என புகழாரம்; மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு சிவ சேனா ஆதரவு!

‘நிஜமான வங்கப் புலி’ மமதா பானர்ஜி

சிவசேனாவின் மற்றுமொரு தலைவர் சுனில் பிரபு கூறுகையில், மமதா பானர்ஜிக்கு ஆதரவு அளிப்பது என்பது எங்கள் கடமை என தெரிவித்தார்.

  • Share this:
மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், அதற்கு பதிலாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸை ஆதரிப்பதாகவும் சிவசேனா அறிவித்துள்ளது. அவருடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக மமதா பானர்ஜியை‘உண்மையான வங்காள புலி’ என்றும் கூறியுள்ளது.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இந்த முடிவை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ட்விட்டரில் சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் சிவசேனா போட்டியிடுமா போட்டியிடாதா என அறிந்துகொள்ள பொதுமக்களில் பலரும் ஆர்வமாக உள்ளனர். எனவே கட்சித் தலைஅர் உத்தவ் தாக்கரேவுடன் இது தொடர்பான ஆலோசனைக்கு பிறகு இந்த தகவலை வெளியிடுகிறேன்.

“நிகழ்கால சூழலை கருத்தில் கொண்டால் அது மமதா மற்றும் அனைவருக்கும் இடையிலான மோதலாக உள்ளது. அனைத்து 'M'Money (பணம்), Muscle (வலிமை) Media (ஊடகம்) போன்ற அனைத்தும் 'M'amata மமதாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. எனவே மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் சிவசேனா போட்டியிடாமல் மமதா பானர்ஜிக்கு ஆதரவாக இருப்பது என முடிவெடுத்துள்ளது. மமதா பானர்ஜி ‘கர்ஜனை’மிக்க வெற்றி பெற வாழ்த்துக்கள். ஏனென்றால் அவர் தான் உண்மையான வங்கப் புலி என நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார் சஞ்சய் ராவத்.

CNN-News18 தொலைக்காட்சிக்கு சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் இத் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இந்த முறை மேற்குவங்க தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அதுவே எங்களின் முதல் தேர்தலாக இருந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.மேற்குவங்கத்தில் சிவசேனாவின் வலிமை எந்த அளவு என கேட்ட போது, இது தான் எங்கள் முதல் தேர்தல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாங்கள் இதற்காக நீண்டகாலமாகவே சரியான முறையில் தயாராகி வந்தோம். எங்கள் கணக்கீட்டின்படி 45 தொகுதிகளில் எங்களுக்கு அழுத்தமான ஆதரவு உள்ளது. தற்போது எங்கள் தொண்டர்கள் மமதா பானர்ஜிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.

“தற்போது மமதாவுக்கும், மற்ற அனைவருக்குமான போட்டியாக உள்ளது. அனைத்து பக்கங்களில் இருந்தும் அவரை தாக்கி வருகின்றனர். எனவே அவருக்கு ஆதரவு தர விரும்புகிறோம், மமதா உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம், கடைசி வரை நாங்கள் உங்களுடன் இருப்போம்” என சஞ்சய் ராவத் பேசினார்.

இதே விவகாரம் தொடர்பாக சிவசேனாவின் மற்றுமொரு தலைவர் சுனில் பிரபு கூறுகையில், மமதா பானர்ஜிக்கு ஆதரவு அளிப்பது என்பது எங்கள் கடமை. இது குறித்து கட்சிக்குள் பல நாட்கள் விவாதம் நடைபெற்றது. நாங்கள் இப்போது தேர்தலில்போட்டியிட மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம் என்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் சட்டமன்ற வளாகத்தில் சுனில் தெரிவித்தார்.
Published by:Arun
First published: