மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டால் சீமான் டெபாசிட் இழப்பது உறுதி - திமுக எம்.எல்.ஏ.

மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டால் சீமான் டெபாசிட் இழப்பது உறுதி - திமுக எம்.எல்.ஏ.

சீமான் - மு.க.ஸ்டாலின்

டெபாசிட் தொகையை இழப்பதற்காகவே சீமான் திமுக தலைவரை எதிர்த்து போட்டியிட முடிவு எடுத்துள்ளார் எனக் கூறினார்.

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டால் சீமான் டெபாசிட்டை இழப்பது உறுதி என திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை உள்ள அரசு சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் 841 மாணவ மாணவிகளுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகையை கொடுக்க வேண்டாம் என திமுக கூறவில்லை. கொடுக்கும் தொகைக்கான டோக்கனை அரசு ஊழியர்கள் மூலம் விநியோகிக்காமல் அதிமுகவினர் மூலம் விநியோகிப்பதை தான் திமுக எதிர்ப்பதாக கூறினார்.

  மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் அறிவித்தது குறித்து பதில் அளித்த மா.சுப்பிரமணியன், டெபாசிட் தொகையை இழப்பதற்காகவே சீமான் திமுக தலைவரை எதிர்த்து போட்டியிட முடிவு எடுத்துள்ளார் எனக் கூறினார்.

  ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பதில் அளித்த மா.சுப்பிரமணியன், ரஜினி அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவின் ரூட் எப்போதுமே கிளியர்தான் என தெரிவித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: