சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டி

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.

  • Share this:
    சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்வதில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம் டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் மூன்றாவது அணி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியினர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டது. இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தனது கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் இன்று அறிமுகம் வைத்தார். சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்ப்பட்டது. ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.

    இந்ந நிகழ்ச்சியில் பேசிய சீமான், ஆணுக்கு பெண் சமமல்ல. ஆண்ணும், பெண்ணும் சமம். விவசாயி வாழ்ந்தால் நாடு வாழும். விவசாயிகள் செத்தால் அது நாடல்ல, சுடுகாடு என்று ஆவேசமாக உரையாற்றினார்.
    Published by:Vijay R
    First published: