அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தான் முதலில் அரசு வேலை - சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தான் முதலில் அரசு வேலை தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மீதம் இருந்தால் வழங்குவோம். என்று சீமான் தேர்தல் பரப்புரையாற்றியனார்.

 • Share this:
  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் பவானிசாகர் வேட்பாளர்கர் சங்கீதா ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். மாற்றம் வேண்டும் என்பதில் பிறந்தது இந்த கட்சி். வரலாற்றில் பெருமையாய் வாழ்ந்த மக்கள் நாம். பிரபாகரன் தம்பி நான் எந்த பின்புலுமும் இல்லாதவன். வாரிசு அரசியல் போல நாங்கள் அல்ல.தலைவர்களை இணைக்க வந்தவன் நான் அல்ல.

  இலவசத்திற்காக மக்கள் கையேந்தமால் இருக்க வேண்டும். இலவசம் கவர்ச்சி திட்டம் மக்கள் பயன்பெறும் திட்டம் அல்ல. ஒரு கூட்டத்தை அரிசிக்கும் வேட்டி சேலைக்கும் மக்களை கையேந்த வைக்கின்றன. இலவசம் கொடுக்கும் பொருட்களுக்கு உண்டான பொருட்களை எந்த பணத்தில் இருந்து கொண்டு வருகின்றன. அரசுக்கு 6 லட்சம் கோடி கடன் உள்ளது ஏன் என்று கேட்டால் யார் கடன் இல்லாமல் உள்ளனர் என கேட்கின்றனர்.

  தலைவன் நேர்மையற்றவானக இருந்தால் மக்களையும் நேர்மையற்றவர்கள். .திமுக கட்சி அல்ல கார்பரேட் கம்பெனி. உன்னை ஏமாற்றுபவன் தான் 1000 குடுப்பேன் 1500 குடுப்பேன் என்பான், நான் அதைப்பற்றி பேசமாட்டேன். அதிமுக 5 வருடம், திமுக 5 வருடம் ஆட்சி செய்வது அது மாற்றம் அல்ல.

  அமைச்சர்கள் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என சட்டம் போடப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தான் முதலில் அரசு வேலை தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மீதம் இருந்தால் வழங்குவோம். இதை மாறுதல்கான தேர்தல் ஒரே ஒரு முறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அழியுங்கள் பிரபாகரன் மீது சத்தியமாக சொல்கிறேன். தமிழகத்தை தலை சிறந்த நாடாக மாற்றுவேன். இத்தனை முறை எங்களை தோற்கடித்தீர்கள். ஆனால் நாங்கள் தோற்க்கவில்லை, நீங்கள் தான் தோற்க்கவில்லை என்றார்.
  Published by:Vijay R
  First published: