• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • புதுக்கோட்டை : வாக்கு மையத்துக்கு வெளியே கிடந்த சீல்வைக்கப்பட்ட பேப்பர்!

புதுக்கோட்டை : வாக்கு மையத்துக்கு வெளியே கிடந்த சீல்வைக்கப்பட்ட பேப்பர்!

சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல்வைக்கப்பட்ட பேப்பர், வாக்கு மையத்துக்கு வெளியே கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல்வைக்கப்பட்ட பேப்பர், வாக்கு மையத்துக்கு வெளியே கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது வரும் மே மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் கையொப்பமிட்ட காகிதம், இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு வெளியே கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 27வது வாக்குச்சாவடியில் இருந்து வந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் செய்யபட்ட பேப்பர் Tag அறைக்கு வெளியே கிடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அறையைத் திறந்து மீண்டும் சோதனை செய்ததில் ஒரு இயந்திரத்தில் மட்டும் டேக் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இயந்திரத்தில் ஏதேனும் முறைகேடு செய்திருப்பின் வாக்கு எண்ணும் பொழுது அதை சரி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியதை ஏற்று திமுகவினர் கலைந்து சென்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ram Sankar
    First published: