நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைகிறார்?

Youtube Video

ஒரு தகப்பனாக, நண்பனாக, பக்க பலமாக இருப்பேன் என்று கூறியுள்ள சத்யராஜ், அவருக்காக நிச்சயம் பிரச்சாரம் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வரும் திவ்யா, திமுகவில் இணைவதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக திவ்யா எழுதிய கடிதம் ஒன்றும் ஊடகங்களில் கசிந்திருக்கிறது.

அதில், "தான் வசதியான வீட்டில் பிறந்த பெண் என்பதால் உழைக்கத்தெரியாது என்று நினைக்கத் தோன்றலாம்.. உண்மையில் பென்ஸ் காருக்கும் டைமன்ட் நகைக்கும் அடிமையாக வளர்க்கப்படவில்லை.. அரசியல் என்பது பிசினஸ் இல்லை என்று அப்ப சொல்லி இருக்கிறார்" என எழுதப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, சத்யராஜ் வெளியிட்டுள்ள செய்தியில், குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் என்றும், தன் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருப்பதாகவும் கூறியுள்ளார். திவ்யாவின் அரசியல் பாதையில், ஒரு தகப்பனாக, நண்பனாக, பக்க பலமாக இருப்பேன் என்று கூறியுள்ள சத்யராஜ், அவருக்காக நிச்சயம் பிரச்சாரம் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Published by:Suresh V
First published: