தமிழகம் திரும்பும் சசிகலாவிற்கு சிறப்பு வரவேற்பு... எந்ததெந்த இடங்கள் அறிவிப்பு?

தமிழகம் திரும்பும் சசிகலாவிற்கு சிறப்பு வரவேற்பு... எந்ததெந்த இடங்கள் அறிவிப்பு?

சசிகலா

தமிழகம் திரும்பும் சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்க உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  சென்னை மாநகர எல்லையில் இருந்து சசிகலாவிற்கு 32 இடங்களில் அமமுக தொண்டர்கள் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

  சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி உள்ள சசிகலா நாளை தமிழகம் திரும்புகிறார். சசிகலாவிற்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க அமமுக தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். காவல்துறையிரும் சசிகலாவிற்கு வரவேற்பு கொடுக்க அனுமதி கொடுத்துள்ளதால் தொண்டர்கள் பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எந்த இடையூறும் ஏற்படாமல் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டுமென டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இதனிடையே தமிழகம் திரும்பும் சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்க உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  திருப்பத்தூர் மாவட்டம்
  1. லட்சுமிபுரம்
  2. வாணியம்பாடி டோல் பிளாசா
  3. வாணியம்பாடி பைபாஸ் சாலை
  4. ஆம்பூர்
  5. மாதனூர்

  வேலூர் மாவட்டம்
  1. பள்ளிகொண்டா டோல் பிளாசா
  2. க்ரீன் சர்க்கிள்

  ராணிப்பேட்டை மாவட்டம்
  1. பூட்டுத்தாக்கு
  2. மேல்விஷாரம்
  3. SSS கல்லூரி
  4. வாலாஜா சுங்கச்சாவடி
  5. காவேரிபாக்கம் பேருந்து நிலையம்
  6. சிறுகரும்பூர்
  7. ஓச்சேரி
  8. சித்தஞ்சி
  9. பெரும்புலிபாக்கம்

  கிருஷ்ணகிரி மாவட்டம்

  1. அத்திப்பள்ளி தமிழ்நாடு மாநில எல்லை
  2.ஓசூர் ( தர்கா/மாரியம்மன் கோவில்)
  3.ஓசூர் ஈஸ்வரன் நகர்.
  4. ஓசூர் வசந்த நகர்
  5.சூளகிரி
  6.குருபரபள்ளி
  7.குந்தாரப்பள்ளி
  8.கிருஷ்ணகிரி சுங்கசாவடி.
  9.கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம்.
  10.தொன்னையன் கொட்டாய்(தமிழ்நாடு ஓட்டல்)
  11.கந்திக்குப்பம்.
  12.பருகூர்
  Published by:Vijay R
  First published: