சசிகலா பிப்ரவரி 5-ம் தேதி தமிழகம் திரும்புகிறார்..?

சசிகலா

சசிகலா பெங்களூரிலேயே வீட்டில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி 5-ம் தேதி சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது

 • Share this:
  பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா, சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டார். ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிப்பு குறைந்ததுடன் தற்போது, சர்க்கரை அளவும் கட்டுக்குள் வந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

  இதனால், சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது- இருப்பினும், பெங்களூரிலேயே வீட்டில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி 5-ம் தேதி சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

  இதனிடையே சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறி இல்லாத கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. ஆக்சிஸன் சிலிண்டர் உதவி இல்லாமல் 4-வது நாளாக சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: