சசிகலா விலகலுக்கும் பாஜக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - வானதி ஸ்ரீனிவாசன்

வானதி சீனிவாசன்

சசிகலாவின் விலகலுக்கும் பாஜகவுக்கும் எந்த தொர்புமில்லை. அதுப்போன்று ஏதாவது அழுத்தமிருந்தால் அதை அவர்களே சொல்லியிருப்பார்கள்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சசிகலாவின் அரசியல் விலகலுக்கும் பாஜக-விற்கும் எந்த தொடர்புமில்லை என்று வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

  சசிகலா அரசியிலில் இருந்து விலகுவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

  நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சி தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்“ என்றார்.  சசிகலா அரசியல் விலகல் குறித்து பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசியலை விட்டு விலகுவது சசிகலாவின் தனிப்பட்ட முடிவு. அவரின் அரசியல் மற்றும் கருத்துகள் மீது எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அவர் அரசயிலில் இருந்து விலகி உள்ளார். அதிமுக கட்சி மற்றும் ஆட்சியில் எது நடந்தாலும் அது பாஜகவின் அழுத்தம் என்று சிலர் கூறி வருகின்றனர். அது தவறானது, அதேப் போன்று சசிகலாவின் விலகலுக்கும் பாஜகவுக்கும் எந்த தொர்புமில்லை. அதுப்போன்று ஏதாவது அழுத்தமிருந்தால் அதை அவர்களே சொல்லியிருப்பார்கள். அதிமுக-விற்கு என்றுமே முதல் எதிரி திமுக. அதனால் தான் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்து்ளார் என்றார்.
  Published by:Vijay R
  First published: