ஹோம் /நியூஸ் /அரசியல் /

என்னை நீக்கலாம் நாளை லட்சம் பேர் வருவார்கள் என்ன செய்வீர்கள்? : சசிகலாவுக்கு பேனர் வைத்ததால் நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி கேள்வி

என்னை நீக்கலாம் நாளை லட்சம் பேர் வருவார்கள் என்ன செய்வீர்கள்? : சசிகலாவுக்கு பேனர் வைத்ததால் நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி கேள்வி

சசிகலா

சசிகலா

சசிகலாவை வரவேற்று போஸ்டர் வைத்த நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணிய ராஜா கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சசிகலாவை வரவேற்று போஸ்டர் வைத்த நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணிய ராஜா கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

  அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தை வழிநடத்த வரும் பொதுச்செயலாளர் அவர்களே வருக என்று அவர் சசிகலா புகைப்படத்தோடு போஸ்டர் வைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதனையடுத்து இவரை கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார் என்று அதிமுக மேலிடம் அதிரடி நடவடிகை எடுத்தது, “கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி களங்கம், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காணத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியராஜா இன்று முதல் கழகத்தின் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அவரது நீக்க உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

  இந்நிலையில் நீக்கப்பட்ட நிர்வாகி, “இன்று என்னை நீக்கி விட்டார்கள், நாளை லட்சம் பேர் வருவார்கள், எண்ணிக்கை கோடியாகக் கூட பெருகும் என்ன செய்வீர்கள்” என்று ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு கூறிய போது, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலாதான் என்றார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: AIADMK, Sasikala