ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அரசியல் கட்சியினர் முகத்தில் விட்டெறியுங்கள்: சரத்குமார் ஆவேசம்

ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அரசியல் கட்சியினர் முகத்தில் விட்டெறியுங்கள்: சரத்குமார் ஆவேசம்

சரத்குமார் - ராதிகா

என்றைக்கு ஓட்டுக்குக் காசு வாங்கறோமோ உண்மையான ஜனநாயகத்தைப் பார்க்கவே முடியாது.

 • Share this:
  அரசியல் கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அதை அவர்கள் முகத்தில் திருப்பி வீசி ஏறியுங்கள் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் பணம் வாங்கினால் ஜனநாயகத்தைப் பார்க்கவே முடியாது என்றார்.

  சரத்குமார் கூறியதாவது:

  2021 தேர்தல் வந்து விட்டது, ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கலாம்? ஆயிரம் கொடுக்கலாமா, இரண்டாயிரம் கொடுக்கலாமா என்று எல்லாரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.

  அவர்கள் வந்து பணத்தைக் கொடுத்தால் அவர்கள் முகத்தில் விசிறியடியுங்கள். உங்கள் வருங்காலத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஓட்டுக்கு என்னிக்கி கைநீட்டி பணம் வாங்குகிறோமோ அதை விட கேவலமானது எதுவும் கிடையாது.

  என்றைக்கு ஓட்டுக்குக் காசு வாங்கறோமோ உண்மையான ஜனநாயகத்தைப் பார்க்கவே முடியாது. 10 கோடி செலவாகும் தலைவரே, எங்கேயிருந்து ரூ.10 கோடி பண்றது அப்படீன்னா இந்த நாட்டில் ஏழை எளிய மக்கள், பாமரர்கள், படித்தவர்கள் அரசியலுக்கு வரவே முடியாது.

  என்று கூறினார் சரத்குமார்.
  Published by:Muthukumar
  First published: